ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இருந்தது. 321 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி துரத்தியது. இதில் தொடக்கத்தில் பாகிஸ்தான் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் போல் விளையாடியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
321 என்ற இலக்கை எட்ட வேண்டும் என்றால் பவர் பிளேவில் அதிரடியாக விளையாட வேண்டும். இல்லையேனில் குறைந்தபட்சம் ஐந்து அல்லது ஆறு ரன் ரேட்டிலாவது ரன்களை சேர்க்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் அணி முதல் 10 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
25 ஓவரில் 104 டாட் பந்துகள்:
அதேபோன்று 20 புள்ளி ஐந்து ஓவரின் பாகிஸ்தான் அணி 69 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. பாபர் அசாம், டெஸ்ட் கிரிக்கெட் போல் விளையாடி ரன்களை சேர்த்தார். ஆட்டத்தின் இந்தக் கட்டத்திலேயே பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி விடும் என ரசிகர்கள் கருதினர்.
பாகிஸ்தான் அணி 47. 2 ஓவர்களில் 260 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாபர் அசாம் 90 பந்துகளை எதிர்கொண்டு 64 ரன்கள் சேர்த்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் வெறும் 71 ஆகும். பாகிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கின்றது.
அதாவது முதல் 13.2 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 60 பந்துகளை வீணடித்து இருக்கிறது. இதேபோன்று முதல் 150 பந்துகளில் பாகிஸ்தான் அணி 104 பந்துகளை வீணடித்து ஒரு ரன் கூட சேர்க்காமல் இருந்திருக்கிறது. 321 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்யும் போது இவ்வளவு மோசமாக விளையாடினால் அது மிகப்பெரிய மோசடி என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முயல், ஆமை கதை என அஸ்வின் கிண்டல்:
பாகிஸ்தானின் இந்த செயல்பாடுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கடும் விமர்சனத்தை வைத்திருக்கிறார்கள்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஹைடன், “பாகிஸ்தான் வீரர்கள் வீரர்களை நோக்கியே பந்தை அடிக்கிறார்கள். 321 என இலக்கை எட்டும் போது நீங்கள் கேப்பை பார்த்து தான் பந்தை அடிக்க வேண்டும். அதிரடியாக ஆட வேண்டும் என்ற உத்வேகமே பாகிஸ்தான் வீரர்களிடம் இல்லை”.
“பாகிஸ்தான் அணி ஆரம்ப கட்டத்தில் விக்கெடுகள் விழாமல் பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடுகிறது” என்று ஹைடன் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினும் பாகிஸ்தான் பேட்டிங்கை முயல் மற்றும் ஆமை கதை என குறிப்பிட்டு கிண்டல் அடித்திருக்கிறார்.
பாபர் அசாம் அரை சதம் அடித்த பயணம் முயல் மற்றும் ஆமை கதைக்கு சரியான எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டு இருக்கிறார். பாபர் அசாம் விரைவில் 50 ரன்கள் அடித்து விடுவார் என்றும் அவர் கிண்டல் அடித்திருக்கிறார். இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு வெகுவாக குறைந்திருக்கிறது.
The post 25 ஓவர்.. பாக் 104 டாட் பந்துகள்.. பாபர் அசாமுக்கு முயல் ஆமை கதை சொன்ன அஸ்வின்.. என்ன நடந்தது.? appeared first on SwagsportsTamil.