25 ஆண்டுகள் தொகுதி மறுசீரமைப்பை ஒத்திவைக்க கனிமொழி வலியுறுத்தல்

18 hours ago
ARTICLE AD BOX

தொகுதி மறுசீரமைப்பை  25 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.25 ஆண்டுகள் தொகுதி மறுசீரமைப்பை ஒத்திவைக்க கனிமொழி வலியுறுத்தல்மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதே நோக்கம்; இன்றைய கூட்டம் இந்திய வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக அமைந்தது. இன்றைக்கு வர இயலாத கட்சிகளும் இனி வரும் காலங்களில் இடம் பெறும் கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பார்கள் என கருதுகிறோம். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஏழு மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் இணைந்து செயல்படும் தீர்மானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுவறையை செய்ய வேண்டும். ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவிட்டாலும் நமது நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது வரவேற்க தக்கது. இக்கூட்டத்தின் தீர்மானங்கள் பிரதமர் மோடியை சந்தித்து அளிக்கப்படும் எனக் கூறிய அவர், தொகுதி மறுசீரமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தாமல், மத்திய அரசிடம் இருந்து தெளிவான விளக்கங்களையே நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதிநிதித்துவத்தை குறைப்பது அரசியல் வலிமையை குறைப்பதாகும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Read Entire Article