ARTICLE AD BOX
Madurai Rowdy Murder: தமிழகத்தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ரவுடி காளீஸ்வரன் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைச் சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். அதாவது திருத்தணி அருகே இளைஞர் வெட்டிக் கொலை, ஈரோட்டில் ரவுடி வழிமறித்து படுகொலை, காரைக்குடியில் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்தவர் ஓட ஓட விரட்டிக் கொலை, கும்பகோணத்தில் ஜாமீனில் வந்த ரவுடி கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என விமர்சனம் செய்து வருகின்றனர்.

மதுரையில் ரவுடி படுகொலை
இந்நிலையில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள தனக்கன்குளத்தைச் சேர்ந்த ரவுடி காளீஸ்வரன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 6597 படுகொலைகள்! அப்படினா ஒவ்வொரு நாளும் எத்தனை கொலைகள்? பகீர் தகவல்!

மர்ம கும்பல் வெறிச்செயல்
இந்நிலையில் நேற்றிரவு வீட்டின் வெளியே வந்த காளீஸ்வரனை 3 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வெட்ட முயன்றனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்து அவர் ஓட முயன்றார். ஆனால், அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த காளீஸ்வரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை உறுதி செய்த மர்ம கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியது.
இதையும் படிங்க: அதிகாலையில் அலறிய தலைநகர் சென்னை! ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ்! யார் இந்த ஹைகோர்ட் மகாராஜா?

முன்விரோதம் காரணமாக கொலை
இந்த கொலை சம்பவம் தொடர்பாக அப்பகதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காளீஸ்வரன் உடலை கைப்பற்றி மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உறவினர்களோ, காளீஸ்வரனை வெட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் காளீஸ்வரனின் உறவினர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றது தெரியவந்தது.