22 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்!. இன்னும் எத்தனை பேர் சிறையில் உள்ளனர் தெரியுமா?

1 day ago
ARTICLE AD BOX

Indian fishermens: பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தண்டனை காலம் முடிந்ததையடுத்து 22 இந்திய மீனவர்களை நேற்று கராச்சி மாலிர் சிறையில் இருந்து அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.

மீன்பிடிக்கும்போது, ​​இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் கடல் எல்லைகளைக் கடந்து பணியில் ஈடுபடுவதால், மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. அந்தவகையில், கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி குஜராத் (18), உத்தர பிரதேசம் (1) மற்றும் டையூ (3) ஆகிய பகுதிகளை சேர்ந்த 22 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை சிறைபிடித்து சென்றது. இதையடுத்து, இவர்களுக்கு 3 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தற்போது இவர்களின் தண்டனை காலம் நிறைவடைந்ததையடுத்து, 22 இந்திய மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கராச்சியில் உள்ள மாலிர் சிறையில் இருந்து இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் விடுவித்தனர். தண்டனைக் காலம் முடிந்த பிறகு மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக மாலிர் சிறை கண்காணிப்பாளர் அர்ஷத் ஷா தெரிவித்தார். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் சனிக்கிழமை (பிப்.22) அட்டாரி-வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பினர்.

ஜனவரி 1 ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட கைதிகளின் பட்டியலின்படி, பாகிஸ்தானில் 217 மீனவர்கள் உட்பட 266 இந்திய கைதிகள் உள்ளனர். இந்தியா பகிர்ந்து கொண்ட பட்டியலின்படி, இந்திய சிறைகளில் மொத்தம் 462 பாகிஸ்தான் கைதிகள் உள்ளனர், அதில் 81 மீனவர்கள் அடங்குவர். கடந்த 2 ஆண்டுகளில், பாகிஸ்தானில் 8 இந்திய மீனவர்கள் இறந்துள்ளதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி ANI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தவிர, தண்டனைக் காலம் முடிந்த பிறகும் 180 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தியா தொடர்ந்து இந்தப் பிரச்சினைகளை பாகிஸ்தானிடம் எழுப்பி வருகிறது.

Readmore:“தாத்தா என்ன தொடாதீங்க பிளீஸ்..” கதறி துடித்த சிறுமிகள்; இரக்கம் இல்லாமல் முதியவர்கள் செய்த காரியம்..

The post 22 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்!. இன்னும் எத்தனை பேர் சிறையில் உள்ளனர் தெரியுமா? appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article