ARTICLE AD BOX
214 பாகிஸ்தான் பணயக்கைதிகளை தூக்கிலிட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு; சர்வதேச சட்டத்திற்கு இணங்கி செயல்பட்டதாக அறிக்கை
செய்தி முன்னோட்டம்
பணயக்கைதிகள் பரிமாற்றம் குறித்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததை காரணம் காட்டி, 214 பணயக்கைதிகளை தூக்கிலிட்டுள்ளதாக பலூச் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) அறிவித்துள்ளது.
பிஎல்ஏ செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலூச் பெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பாகிஸ்தான் ராணுவம் 48 மணி நேர இறுதி எச்சரிக்கையை புறக்கணித்ததாகவும், இதனால் பலர் தூக்கிலிடப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
சர்வதேச சட்டத்திற்கு இணங்கியே இதை செய்துள்ளதாக தெரிவித்த அவர், பாகிஸ்தான் ராணுவம் தனது வீரர்ளைப் பாதுகாக்கத் தவறியதாகவும் தெரிவித்துள்ளார்.
"பாகிஸ்தான் தனது பணியாளர்களை அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக போருக்கு எரிபொருளாகப் பயன்படுத்த விரும்பியது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிஎல்ஏ தனது வீழ்ந்த போராளிகளையும் கௌரவித்தது. நடவடிக்கையின் போது தங்கள் தரப்பில் 12 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் கூறியது என்ன?
ஆபரேஷன் தர்ரா-இ-போலான் மூலம், பணயக்கைதிகளை மீட்க முயன்ற பாகிஸ்தான் சிறப்பு அதிரடிப்படை கமாண்டோக்களை பதுங்கியிருந்து வீழ்த்தியதாக பிஎல்ஏ கூறியது. பிஎல்ஏவின் கூற்றுப்படி, கடுமையான சண்டை நடந்தது.
இதன் விளைவாக கமாண்டோக்களிடையே பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன மற்றும் பணயக்கைதிகள் தூக்கிலிடப்பட்டனர்.
பாகிஸ்தான் படைகள் தங்கள் மீட்பு முயற்சிகளில் தோல்வியடைந்ததாகவும், சில பணயக்கைதிகளை வெற்றிகரமாக மீட்டதாக ராணுவம் பொய்யாக சித்தரிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
முன்னதாக, ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக முறியடித்ததாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்த போதிலும், போர் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பிஎல்ஏ தொடர்ந்து கூறியது.
பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR), ராணுவ நடவடிக்கையில் 33 கிளர்ச்சியாளர்கள் அழிக்கப்பட்டதோடு, பணயக் கைதிகளை மீட்டு கடத்தலை முடிவுக்கு கொண்டுவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.