ARTICLE AD BOX
ஆட்டோகிராப்
சேரன் இயக்கி, நடித்து காதல் கதைக்களத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆட்டோகிராப்.
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது. இன்று வரை சேரனுக்கு மக்கள் மத்தியில் அடையாளமாக இருக்கும் படங்களில் முக்கியமான படம் இதுவே ஆகும்.
இப்படத்தில் சினேகா, கோபிகா, கனிகா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். ஆட்டோகிராப் திரைப்படம் நான்கு தேசிய விருதுகளையும் மற்றும் 6 தமிழக அரசின் விருதுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வீடியோ
தற்போது, இப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆகி விட்டது. இப்படம் விரைவில் ரீ-ரிலீஸ் ஆக உள்ள நிலையில், ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட டிரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.