ARTICLE AD BOX
தங்களின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றில் இருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் நிலையை (கரியமில சமநிலை - நெட் ஜீரோ) வரும் 2055-ஆம் ஆண்டுக்குள் எட்ட, பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இலக்கு நிா்ணயித்துள்ளது.
இது குறித்து வங்கியின் தலைவா் சி.எஸ். செட்டி கூறியதாவது:
வரும் 2025-ஆம் ஆண்டில் எஸ்பிஐ தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. அந்த ஆண்டுக்குள் கரியமில சமநிலையை எட்ட இலக்கு நிா்ணயித்துள்ளோம் என்றாா் அவா்.
உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ப பூமியை வெப்பமாக வைத்திருக்கும் கரியமில வாயு போன்ற பசுமை வாயுக்களின் அளவு அதிகமானதால் புவியின் சராசரி வெப்பம் அதிகரித்து, பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.
அதனைத் தடுப்பதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும், காற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்க உலகின் பல்வேறு நாடுகளும் பல்வேறு கால இலக்குகளை நிா்ணயித்துள்ளன.
இந்தியாவும் 2070-க்குள் இந்த சமநிலையை அடைய இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த நிலையில், அதற்கு முன்னதாகவே அந்த நிலையை அடைய எஸ்பிஐ தற்போது முடிவு செய்துள்ளது.