2026ல் தமாகா எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு செல்வார்கள்: நம்புகிறார் ஜி.கே.வாசன்

8 hours ago
ARTICLE AD BOX

நாமக்கல்: நாமக்கல்லில் தமாகா சார்பில், கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தலைமை வகித்து பேசினார். முன்னதாக அவர் அளித்த பேட்டி: சர்வதேச அளவில் திறனை வளர்த்துக்கொள்ள, மாணவர்கள் 3 மொழிகள் படிக்க வேண்டும். நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு என்பது, எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு செய்யப்படுகிறது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் இணைந்து, வெற்றிக்கூட்டணியை உருவாக்க தமாகா பாடுபடும். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, தமாகா எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு செல்வார்கள். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

The post 2026ல் தமாகா எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு செல்வார்கள்: நம்புகிறார் ஜி.கே.வாசன் appeared first on Dinakaran.

Read Entire Article