2025ல் வரும் பேரழிவுகள்! பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புகள்

4 days ago
ARTICLE AD BOX

2025ம் ஆண்டில் பாபா வாங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பாபா வங்கா

பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வாங்கா 1911ம் பிறந்தவர் ஆவார். இவர் சிறுவயதில் புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார்.

பாபா வங்கா பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்ட நிலையில், இவர் 1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி மரணமடைந்தார்.

இவர் மரணிப்பதற்கு முன்பு பிற்காலத்தில் பூமியில் நடக்கும் விடயங்களைக் குறித்து அதிர்ச்சியூட்டும் கணிப்புகளை வைத்துச் சென்றுள்ளார்.

இவர் உலகத்தை குறித்த கணித்து கூறிய விடயங்களில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்துள்ளது. பல நிகழ்வுகளை துல்லியமாக கணித்ததால், மக்கள் மத்தியில் பிரபலமான தீர்க்கதரசியாகவும் காணப்படுகின்றார். இவர் 2025ம் ஆண்டு குறித்து கணித்துள்ள கணிப்பு குறித்த தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2025ம் ஆண்டில் என்ன நடக்கும்?

இந்த ஆண்டில் ஐரோப்பா கடுமையான உள் சண்டையை சந்திக்கக்கூடுவதாகவும், இதனால் மக்கள் தொகை குறைப்பு மற்றும் பிராந்திய அழிவு ஏற்படுமாம். 

2025ம் ஆண்டில் மருத்துவம் மற்றும் அறிவியல் முன்னேற்றம் அசுர வளர்ச்சியை அடையும் என்று கூறியுள்ளார். அதாவது செயற்கையாக உடல் உறுப்புகளை உருவாக்கி மக்களின் ஆயுள் காலத்தினை அதிகரிக்க முயற்சி நடக்கும். புற்றுநோய் போன்ற வியாதிகளுக்கு அறிவியல் மற்றும் மருத்துவத்தில் மூலம் மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மனிதர்கள் டெலிபதியாக மாறக்கூடும் என்றும் இதனால் மக்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை வெகுவாக மாற்றும் என்று கணித்துள்ளார். டெலிபதி என்பது மக்கள் எவ்வளவு தூரம் இருந்தாலும் ஒருவொருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியுமாம்.

வேற்று கிரக வாசிகளுடன் மனிதர்கள் தொடர்பில் இருப்பார்கள். வேற்கு கிரக நிகழ்வுகளுடன் அனுபவங்களை சந்திக்கும் வாய்ப்பு இந்த ஆண்டு நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.


2025 ஆம் ஆண்டில், பேரழிவுகளின் தொடர் நிகழ்வுகள் தொடங்கக்கூடும் என்று அவர் கணித்துள்ளார். அதை அவர் "பேரழிவின் ஆரம்பம்" என்று அழைத்தார். மனிதகுலம் முற்றிலுமாக அழிக்கப்படாவிட்டாலும், இந்தக் காலகட்டம் உலகளாவிய மாற்றங்களை ஏற்படுத்தும் சிரமங்களைக் குறிக்கலாம் என்று கூறப்படுகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        
Read Entire Article