ARTICLE AD BOX

2025 சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையே கடுமையான மோதல் நடந்தது. கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பந்து வீச்சாளர் ஷாஹீன் ஆஃப்ரிதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு மிகவும் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சை முழுமையாக கட்டுப்படுத்தி, ஆட்டத்தை தங்களுக்கே சாதகமாக மாற்றிக்கொண்டனர்.
ஷாஹீன் ஆஃப்ரிதிக்கு இந்த ஆட்டம் மிகவும் கடினமானதாக அமைந்தது. எந்த ஒரு விக்கெட்டையும் எடுக்க முடியாததால், நியூசிலாந்து 320 ரன்கள் என்ற பெரிய இலக்கை அமைத்தது. குறிப்பாக, இறுதி ஓவர்களில் அவர் மிகவும் பின்தங்கினார் என்றே சொல்லலாம். 47வது ஓவரில், ஷாஹீன் வீசிய பந்தில் டாம் லாதம் ஒரு இன்சைடு எட்ஜ் அடித்தார். ஆனால் அது நேராக பவுண்டரிக்குச் சென்றது.
இந்த நேரத்தில், கேப்டன் முகமது ரிஸ்வான் கடுமையாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்வானது நேரலை கமெண்டேட்டர்களால் கவனிக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டூல், ஷாஹீன் ஆஃப்ரிதிக்கு ஆதரவாக “இந்த நேரத்தில் பந்துவீச்சாளரை விமர்சிக்க முடியாது. இது ஒரு சிறப்பான டெலிவரி” என்று கூறினார்.
— Nihari Korma (@NihariVsKorma) February 19, 2025