ARTICLE AD BOX
நடப்பு 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு பங்களாதேஷ் வீரர் கூட மெகா ஏலத்தில் வாங்கப்படவில்லை. இந்த நிலையில் லக்னோ அணி தன்னை ஐபிஎல் தொடரில் விளையாட வைக்க முயற்சிகள் செய்து வருவதாக பங்களாதேஷ் வீரர் டஸ்கின் அகமத் கூடியிருக்கிறார்.
தற்போது லக்னோ அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் மோசின் கான், ஆவேஷ் கான் மற்றும் மயங்க் யாதவ் மூவரும் விளையாடுவது 99 சதவீதம் சந்தேகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த அணிக்கு உள்நாட்டு வெளிநாட்டு வேத பந்துவீச்சாளர்கள் தற்போது மிகவும் தேவையாக இருக்கிறார்கள்.
ஐபிஎல் தொடரில் பங்களாதேஷ் வீரர்கள் ஏன் இல்லை?
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் மற்றும் முடியும் நேரத்தில் பங்களாதேஷ் அணி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் படி தன்னுடைய அட்டவணையை அமைத்திருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தங்கள் வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழை வழங்குவதற்கும் தாமதம் செய்கிறது. இதுவெல்லாம் ஐபிஎல் நிர்வாகத்திற்கு சரியாக வரவில்லை.
மேலும் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிய முஸ்தஃபிசூர் ரகமானை முன்கூட்டியே டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அழைத்துக் கொண்டது. இதையெல்லாம் வைத்து இந்த முறை எந்த ஐபிஎல் அணி நிர்வாகங்களும் ஏலத்தில் பங்களாதேஷ் வீரர்களை வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ அணியின் அழைப்பு
இது குறித்து பங்களாதேஷ் வீரர் டஸ்கின் அகமத் கூறும் பொழுது ” இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்களாதேஷ் வீரர்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் பெரிய தொடர்களில் மாற்று வீரர்களாக பலவீரர்கள் கொண்டுவரப்படுகிறார்கள். இந்த வகையில் லக்னோ அணி நிர்வாகம் என்னை அணுகியது. மேலும் தேவைப்படும்பொழுது தடையில்லா சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் இருக்கக் கூடாது என்றும் கேட்டிருக்கிறது”
இதையும் படிங்க : ஐபிஎல்ல அந்த விஷயம் பத்தி சொல்ல மாட்டேன்.. ஆனா கப் அடிக்க சான்ஸ் இந்த டீம்குதான் – கங்குலி பேட்டி
“அதே நேரத்தில் நான் என்னுடைய கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை இது தொடர்பாக நடத்தியிருக்கிறேன். இந்த வகையில் இந்த முறை தடையில்லா சான்றிதழ் பெறுவதில் எந்தவித குழப்பமும் தாமதமும் இருக்காது என்று நான் நம்புகிறேன். லக்னோ அணி என்னை அழைத்தால், நான் உடல் தகுதியுடன் என்னை வைத்துக் கொண்டு செல்வதற்கு தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
The post 2025 ஐபிஎல்-ல் பங்களாதேஷ் பிளேயர்கள் ஏன் இல்லை?.. லக்னோ கொடுத்த அழைப்பு – டஸ்கின் அகமத் பேட்டி appeared first on SwagsportsTamil.