ARTICLE AD BOX
தமிழகத்தில் முன்னணியில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்க அனைவரும் விரும்புவார்கள். ஆனால் அவர்கள் விருப்பம் நிறைவேற வேண்டும் என்றால், அவர்களின் கட் ஆப் மதிப்பெண்கள் அதற்கு தகுந்தார்போல் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக இந்த கட்ஆப் மதிப்பெண்கள், இடஒதுக்கீடு அடிப்படையில் மாறுபடும் என்பது அனைவருக்கும் தெரியும். இதில் பொது, பி.சி.. எம்.பி.சி. எஸ்.சி., எஸ்.டி உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
அந்த வகையில் தமிழகத்தில் முன்னணியில் உள்ள பொறியல் கல்லூரிகளில் படிக்க எவ்வளவு கட் ஆப் மதிப்பெண்கள் தேவை என்பதை, தினேஷ் பிரபு என்பவர் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள டாப் 30 பொறியியல் கல்லுரிகளில் நீங்கள் படிக்க விரும்பினால், அதற்கு கட் ஆப் மதிப்பெண் 185 இருக்க வேண்டியது அவசியம். பொது பிரிவினராக இருந்தால் 185 மதிப்பெண்களும், பி.சி. பிரிவினர் 182 மதிப்பெண்களும், எம்.பி.சி பிரிவினர் 175 மதிப்பெண்களும், எஸ்.சி பிரிவினர் 170 மதிப்பெண்களும், எஸ்.சி.அருந்ததியர் பிரிவினர் 160 மதிப்பெண்களும், எஸ்.டி பிரிவினர் 155 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும். இந்த மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் சையின்ஸ் பாடப்பிடிப்புக்கு மட்டும் தான்.
இந்த கட்ஆப் மதிப்பெண்கள் எடுத்தால், அண்ணா பல்கலைகழகத்தின் முன்னிலை கல்லூரிகளில், சி.ஐ.டி, உள்ளிட்ட முன்னணி கல்லூரிகளில் படிக்க சீட் கிடைக்கும். இந்த பட்டியலில், கடந்த வருடம், கம்ப்யூட்டர் சையின்ஸ் பாடப்பிடிப்புக்கு அட்மிஷன் நடைபெற்றதில், அண்ணா பல்கலைகழகத்தில் பொது பிரிவினருக்கான கட்ஆப் மதிப்பெண் 199 ஆக கணக்கிடப்பட்டது. அண்ணா பல்கலைகழகம் தவிர்த்து, எஸ்.எஸ்.என்., பஜ.எஸ்.ஜி, சி.ஐ.டி, ஜி.சி.டி, பி.எஸ்.ஜி ஐ டெக், டி.சிஇ மதுரை, குமரனகுரு கல்லூரி மதுரை, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் அடங்கும்.
185-க்கு அதிகமான கட்ஆப் மதிப்பெண்கள் வைத்திருக்கும் மாணவர்கள் இந்த கல்லூரிகளில் அட்மிஷன் பெறுவதற்கு முயற்சி செய்யலாம். இந்த கல்லூரிகள், ஆண்டுதோறும் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் கல்லூரிகளில் முக்கியமானதாக இருக்கிறது. இதில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் அட்மிஷன் பெறுவதற்கு முயற்சி செய்யலாம். மேலும் இந்த கல்லூரிகள் இதற்கு முன்பு கட்ஆப் மதிப்பெண்களை வைத்து மாணவர்களை தேர்வு செய்த டேட்டாவை வைத்து பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.