ARTICLE AD BOX

கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தேசிய கல்விக் கொள்கையை ஏற்று அந்தத் திட்டத்தில் கையெழுத்து போட்டால்தான் 2000 கோடி கிடைக்கும் என்று ஒன்றிய அரசு சொல்கிறது. பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்று சொன்னாலும் நாங்கள் கையெழுத்து போட மாட்டோம். இந்த பணத்திற்காக நாங்கள் இன்று கையெழுத்து போட்டால் என்ன ஆகும்? 2000 ஆண்டுக்கு பின்னோக்கி நம்முடைய தமிழ் சமூகம் சென்று விடும். அப்படி ஒரு பாவத்தை நான் எப்போதுமே செய்ய மாட்டேன்.
பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளின் திறமை வளர வேண்டுமா அல்லது மூன்றாவது மொழி திணிக்கப்பட்டு ஒவ்வொரு வகுப்பிலும் படிப்பு தடைப்பட வேண்டுமா? அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் திறமை வளர வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். நாம் எந்த ஒரு மொழிக்கும் எதிரி கிடையாது. இந்தி மொழியும் நமக்கு எதிரி அல்ல. அதனை யார் படிக்க விரும்புகிறார்களோ அவர்கள் இந்தி பிரச்சார சபாவுக்கு சென்றோ, கே.வி பள்ளிகளிலோ அல்லது வேறு பள்ளிகளிலோ படிப்பதை தமிழ்நாடு ஒருபோதும் தடுத்தது கிடையாது. ஆனால் இந்தியை எங்கள் மீது திணிக்க நினைக்காதீர்கள். இந்தியை திணிக்க நினைத்தால் தமிழர் என்றொரு இனமுண்டு தனியே அவருக்கொரு குணம் உண்டு என்பதை தமிழ்நாடு காட்டிவிடும் இன்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.