ARTICLE AD BOX
தமிழகத்தில் அதிமுக- திமுக என பல ஆண்டுகாலமாக மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுகவிடம் ஆட்சியை இழந்த திமுக அடுத்த 10 வருடங்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்க சிரமப்பட்டது. அதன் படி அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வியே திமுகவிற்கு கிட்டியது. இந்த நிலையில் தான் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது வலுவான கூட்டணியை திமுக உருவாக்கியது. அதன் படி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் என முக்கிய அரசியல் கட்சிகளை இணைத்தது.2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு திமுக காய் நகர்த்துகிறது. மாவட்ட செயலாளர்கள் மாற்றம், புதிய நியமனங்கள் என வியூகங்களை வகுத்து வருகிறது.