ARTICLE AD BOX
200 சதவீத போனஸ் வழங்கும் மெட்டா நிறுவனம்.. யார் யாருக்கு தெரியுமா?
மெட்டா நிறுவனம் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கு போனஸ் வழங்கவுள்ளது. இதற்கு முன்னர் வழங்கப்பட்ட போனஸ் தொகையை விட தற்போது போனஸ் விகிதம் அதிகரித்துள்ளது. முன்பு 75% போனஸ் கிடைத்தது. இப்போது இந்த விகிதம் 200 சதவீதம் வரை இருக்கும் என்று நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா CEO மார்க் சக்கர்பொர்க் உட்பட சில உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே இது பொருந்தும். பிற ஊழியர்களுக்கு பொருந்தாது.
பிப்ரவரி 13-ஆம் தேதியன்று மற்ற நிறுவனத்தின் டைரக்டர்கள் ஒரு முக்கிய முடிவை எடுத்தனர். அப்போதுதான் நிர்வாகிகளுக்கான ஊதியத்தை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த முக்கிய முடிவுக்கு காரணம் மெட்டா போன்ற இருக்கும் பிற நிறுவனங்களில் உள்ள இதே போன்ற பதவிகளை வகிக்கும் ஊழியர்களுடன் ஒப்பிடும்போது மெட்டாவின் நிர்வாகிகளுக்கு ஊதியம் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.

எனவே இதை சமன் செய்யும் பொருட்கள் ஊழியர்களுக்கான போனஸ் உயர்த்தப்பட்டது. கடந்த வாரம் மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களில் 5 சதவீதத்தினரை பணி நீக்கம் செய்தது. இந்த பணி நீக்கம் செய்யப்பட்டு ஒரு வாரத்திற்கு பிறகு தற்போது போனஸ் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி, மெட்டா நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கான வருடாந்திர ஸ்டாக் ஆப்ஷன் வழங்குவதை 10% குறைத்தது. இது அந்தந்த ஊழியர்கள் பணி புரியும் இடம் மற்றும் அவர்களின் பணிகளை பொறுத்து மாறுபடும். அதாவது சிலருக்கு அதிகமான ஸ்டாக் ஆப்ஷன்களும் வழங்கப்படலாம், சிலருக்கு குறைவான ஸ்டாக் ஆப்ஷன்களும் வழங்கப்படலாம்.
செயல் திறனை மேம்படுத்தி, செலவை குறைப்பதற்கு மெட்டா நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், கடந்த ஆண்டு மெட்டாவின் பங்கு விலை 47 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. வியாழக்கிழமை அன்று $694.84 என்ற விலையில் நிறைவடைந்தது. பங்கு விலை உயர்வதற்கான முக்கிய காரணம் டிஜிட்டல் விளம்பரங்களின் வருவாய் மற்றும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் முதலீடுகளின் மீது முதலீட்டாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கை தான். ஜனவரியில் மெட்டா நிறுவனம் நான்காவது காலாண்டு வருவாயை அறிவித்தது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் வருவாய் விகிதம் 21 சதவீதம் அதிகரித்து 48.39 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.