ARTICLE AD BOX
பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை அமீர்கான் தான் கடந்த 20 ஆண்டுகளாக சம்பளமே வாங்காமல் நடித்து வருவதாக கூறி இருக்கிறார்.

இந்திய சினிமாவில் நடிகர்களோட சம்பளம் தான் தற்போது மிகப்பெரிய பேசுபொருள் ஆகி இருக்கிறது. சினிமா தொழில் நல்லா இருக்க வேண்டும் என்றால் நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என அனைத்து மொழி தயாரிப்பாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நான் இருபது வருஷமா படத்துக்கு சம்பளமே வாங்கவில்லை என பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் சொல்லியிருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சியில் பேசும்போது அமீர்கான் இந்த தகவலை சொல்லி இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் அந்தஸ்து இருந்தும் ‘தாரே ஜமீன் பர்’ மாதிரி திரைப்படங்கள் எப்படி பண்ண முடிஞ்சுது என்பது பற்றி பேசும்போது அமீர் கான் இந்த தகவலை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “அந்த படத்தோட கத கேட்டதும் கண்டிப்பா மக்கள் பாக்க வேண்டிய படம்னு தோணுச்சு. நான் அந்த கத கேட்டு நிறைய அழுதேன். ஆனா படம் பண்ணனும்னா என்னோட சம்பளம் பிரச்னையா இருந்துச்சு. என்னோட சம்பளம் இல்லாம படம் 10-20 கோடிக்கு முடிஞ்சிடும். அப்போ லாபத்த பங்கு போடுறது சரியா இருக்கும்னு தோணுச்சு” என அமீர்கான் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... 60 வயதில் 3வது திருமணமா? அமீர்கானின் காதல் வலையில் சிக்கியது யார் தெரியுமா?

மேலும் “நான் லாபத்துல பங்கு வாங்குற மாதிரிதான் பணம் சம்பாதிக்கிறேன், இது முன்ன தெருவுல பாட்டு கச்சேரி பண்றவங்க பண்ற மாதிரி. அவங்க தெருவுல பாட்டு பாடுவாங்க, அப்புறம் தொப்பிய எடுத்து ஆடியன்ஸ்கிட்ட நீட்டுவாங்க. அவங்களுக்கு பிடிச்சிருந்தா காசு போடுவாங்க, இல்லனா விட்டுடுவாங்க. அதே மாதிரி, என்னோட படம் ஓடுனா நான் சம்பாதிப்பேன், இல்லனா இல்ல. 20 வருஷத்துக்கு மேல இததான் பண்ணிட்டு இருக்கேன், நான் சம்பளம் வாங்குறது இல்ல" என அமீர் கான் கூறி இருக்கிறார்.

3 இடியட்ஸ் படத்தை பற்றி அமீர் கான் பேசுகையில், “உங்கள்ள நிறைய பேரு அந்த படத்த பாத்துருப்பீங்க, உங்க பிரண்ட்ஸ்கிட்டயும் ஃபேமிலிகிட்டயும் பாக்க சொல்லிருப்பீங்க, திரும்பவும் பாத்துருப்பீங்க. படம் நிறைய காசு சம்பாதிச்சுது. அதனால அந்த லாபத்துல எனக்கும் பங்கு கிடைச்சுது. முக்கியமா, என்னோட வருமானம் படம் நல்லா இருக்குறத பொறுத்தும், அது மக்கள ரீச் ஆகுறத பொறுத்தும் இருக்கு"ன்னு அமீர் கான் பேசி உள்ளார். தயாரிப்பாளர்கள் மேல இருக்குற பண கஷ்டத்த விட, லாபத்த பங்கு போடுறது எனக்கு சாதகமா இருந்து நல்ல படம் எடுக்க உதவுவதாகவும் அமீர் கான் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... விஜய் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அமீர்கான்! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே