2 வாரத்துல தொப்பை குறைக்க இந்த 3 ஃபுட்ஸ்... எந்த நேரத்துல சாப்பிடணும்? சொல்லும் வி.ஜே ரம்யா

3 hours ago
ARTICLE AD BOX

தொப்பையை எப்படி குறைப்பது என பலரும் இணையத்தில் தேடி இருப்போம். இது குறித்த தகவல்களையும் சில புத்தகங்களிலும் படித்திருப்போம். அந்த வகையில் தொப்பையை எவ்வாறு குறைக்கலாம் என வி.ஜே. ரம்யா சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

Advertisment

மூன்று உணவுகளை சாப்பிடுவதன் மூலம் தொப்பையை குறைக்கலாம் என வி.ஜே ரம்யா தெரிவித்துள்ளார். வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாஷியம், வயிறு உப்புசமாக இருக்கும் உணர்வை குறைக்க உதவுகிறது. இதேபோல், வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால், உடனடியாக பசி எடுப்பதும் கட்டுப்படுத்தப்படுகிறது. அந்த வகையில், உடற்பயிற்சிக்கு முன்பாக, சிற்றுண்டியாக, இரவு உணவுக்கு பின்னர் என வாழைப்பழங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று வி.ஜே ரம்யா கூறுகிறார்.

இதேபோல், நம் உடலில் மெட்டபாலிசமை மேம்படுத்துவதற்கு கிரீன் டீ பயன்படுகிறது. மேலும், தேவையற்றை கொழுப்புகளை ஈசியாக கரைப்பதற்கு கிரீன் டீ உபயோகமாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில், காலை நேரத்தில் கிரீன் டீ குடிப்பது நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், சாதாரண டீ மற்றும் காபிக்கு பதிலாக கிரீன் டீயை பழக்கப்படுத்திக் கொள்ளலாம் என வி.ஜே ரம்யா அறிவுறுத்துகிறார். உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பாக கிரீன் டீ எடுத்துக் கொள்ளும் போது அவை கூடுதல் நன்மையை கொடுக்கும்.

தொப்பையை குறைப்பதில் முட்டையும் முக்கியமான பங்கு வகிக்கிறது என வி.ஜே. ரம்யா தெரிவித்துள்ளார். முட்டையில் புரதச் சத்து நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரியும். இதேபோல், முட்டையில் கோலின் என்ற வேதிப்பொருளும் இருக்கிறது. இவை தேவையற்ற கொழுப்பை கரைக்க நமக்கு பெரிதும் உதவுகிறது. மேலும், முட்டையில் இருக்கும் புரதம் நம் பசி உணர்வையும் கட்டுப்படுத்துகிறது. காலை உணவாக முட்டையை அவித்து சாப்பிடலாம். இது தவிர ஆம்லெட் போன்று சாப்பிடுவதும் பசி உணர்வை குறைக்கும்.

Advertisment
Advertisement

எனவே, இந்த உணவு பொருட்களை சரியான விகிதத்தில் எடுத்துக் கொண்டால் தொப்பையை குறைக்கலாம் என வி.ஜே ரம்யா தெரிவித்துள்ளார்.

நன்றி - Stay Tuned with Ramya Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Read Entire Article