2-வது டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு.. பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

14 hours ago
ARTICLE AD BOX

டுனெடின்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி டுனெடினில் இன்று நடைபெறுகிறது. அங்கு மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக மழை பெய்ததால் இந்த ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த போட்டி 15 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

பாகிஸ்தான்: முகமது ஹாரிஸ், ஹசன் நவாஸ், சல்மான் ஆகா (கேப்டன்), இர்பான் கான், ஷதாப் கான், அப்துல் சமத், குஷ்தில் ஷா, ஜஹந்தத் கான், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், முகமது அலி.

நியூசிலாந்து: டிம் சீபர்ட், பின் ஆலன், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் ஹே, மைக்கேல் பிரேஸ்வெல்(கேப்டன்), ஜகரி பவுல்க்ஸ், ஜேக்கப் டபி, இஷ் சோதி, பென் சியர்ஸ்.


Read Entire Article