2,676 அரசு பள்ளிகளில் ரூ.65 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறை: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

5 hours ago
ARTICLE AD BOX

Published : 15 Mar 2025 02:20 AM
Last Updated : 15 Mar 2025 02:20 AM

2,676 அரசு பள்ளிகளில் ரூ.65 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறை: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

<?php // } ?>

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும். ரூ.160 கோடியில் 2,000 அரசு பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும். 2,676 அரசு பள்ளிகளில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) அமைக்கப்படும்.

அரசு பள்ளிகளில் 1721 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், 841 பட்டதாரி ஆசிரியர்களும் (மொத்தம் 2,562 பேர்) நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படுவர். இதற்கான தேர்வு அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும்.

அகில இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி உதவித்தொகையுடன் கூடிய பட்டப்படிப்புகள் குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நான் முதல்வன்-கல்லூரி கனவு திட்டம்' மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். முதல்கட்டமாக, 388 ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள 500 அரசு பள்ளிகளில் உயர்கல்விவிழிப்புணர்வும் சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படும். இதன்மூலம் ஒரு லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.

மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய தேசிய கல்விக்கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ளாததால், ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும் ரூ.2,152 கோடி கல்வி நிதியை மத்திய அரசு தமிழகத்துக்கு விடுவிக்காமல் வஞ்சித்து வருகிறது. மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதியை விடுவிக்காவிட்டாலும் பள்ளி மாணவர்களின் கல்வி ஒரு துளியும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்டவற்றுக்கான நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் கல்வராயன்மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உள்ளிட்ட இடங்களில் தொலைதூர மலைப்பகுதிகளில் அமைந்துள்ள 14 அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். சேலம், கடலூர், திருநெல்வேலியில் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தலா ஒரு லட்சம் புத்தகங்களுடன் நூலகங்கள்அமைக்கப்படும்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article