2,000 USAID ஊழியர்களை பணிநீக்கம் செய்தது டிரம்ப் நிர்வாகம்

2 days ago
ARTICLE AD BOX
2,000 USAID ஊழியர்களை பணிநீக்கம் செய்தது டிரம்ப் நிர்வாகம்

2,000 USAID ஊழியர்களை பணிநீக்கம் செய்தது டிரம்ப் நிர்வாகம்; எஞ்சிய ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Feb 24, 2025
10:32 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) USAIDஇல் பணியாற்றிய 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது மற்றும் உலகளவில் மீதமுள்ள அனைத்து ஊழியர்களையும் நிர்வாக விடுப்பில் அனுப்பி வைத்தது.

இந்த நடவடிக்கையானது ஆயிரக்கணக்கான USAID ஊழியர்களை அவர்களின் பொறுப்புகளில் இருந்து நீக்க அரசாங்கத்தை அனுமதிக்கும் கூட்டாட்சி நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வருகிறது.

முன்னதாக, அமெரிக்க மாவட்ட நீதிபதி கார்ல் நிக்கோல்ஸ் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட மனுக்களை விசாரித்தார்.

அவர், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்தார்.

அரசியல் சார்பு

USAID இன் அரசியல் சார்பு

நீதிமன்ற உத்தரவைத்த தொடர்ந்து, USAID ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசில், பிப்ரவரி 23, 2025 முதல் இரவு 11:59 முதல், முக்கியமான செயல்பாடுகள், முக்கிய தலைமைத்துவம் அல்லது சிறப்பு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே பணியாற்றுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே USAID இன் வாஷிங்டன் தலைமையகத்தை மூடி, பல உதவி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை நிறுத்திவிட்ட டிரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளில் இந்த முடிவு அடுத்த கட்டத்தை குறிக்கிறது.

டிரம்ப், அவரது தலைமை செலவுக் குறைப்பு ஆலோசகர் எலான் மஸ்குடன் சேர்ந்து, USAID இன் வெளிநாட்டு உதவித் திட்டங்களை வீணானதாகவும், அரசியல் சார்புடையதாகவும் விமர்சித்தார்.

இதற்கிடையே ஆட்குறைப்பு நடைமுறைக்கு வருவதால், அமெரிக்க நிதியுதவி பெறும் சர்வதேச உதவித் திட்டங்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது.

Read Entire Article