ARTICLE AD BOX

அமெரிக்காவில் உள்ள டென்னசி மாநிலத்தை சேர்ந்தவர் ஜோனாதன் பெல்க்(41). இவருக்கு ஜடா கோல்ஸ்டன் (31) மனைவி உள்ளார். இந்த நிலையில் பெல்க் வேலை பார்த்துவிட்டு சம்பவ நாளன்று வீட்டிற்கு சீக்கிரமாக வந்துள்ளார். அப்போது தனது மனைவியுடன் இளைஞர் ஒருவர் தகாத உறவில் இருப்பதை கண்டு ஆத்திரத்தில் பெல்க் அந்த இளைஞரை பலமுறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் தனது மனைவியையும் கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சில மணி நேரங்களுக்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது வீட்டின் முன் பகுதியில் பெல்க் உடை முழுவதும் ரத்தத்தால் நனைந்து நின்று கொண்டிருந்தார். உடனே அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது பெல்க் “நான் அவனை முடித்து விட்டேன். இப்போ என் மனைவியோட உறவு என்ன ஆகும்?”என கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த இளைஞரின் உடல் குப்பை தொட்டியில் கிடந்ததாகவும், அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்த விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் ப்லாய்ட்(18) என்பதும் தெரியவந்தது. மேலும் பெல்கின் மனைவி படுகாயம் அடைந்த நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால் பெல்கின் மனைவி காவல்துறையிடம் “ஒரு அடையாளம் தெரியாத நபர் தனது காதலரை தாக்கியுள்ளதாக” கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.