ARTICLE AD BOX
கனடா: கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுள்ளார். Bank of Canada மற்றும் Bank of England என இரண்டு மிகப்பெரிய நாடுகளின் மத்திய வங்கிகளின் ஆளுநராக மார்க் கார்னி செயல்பட்டு வந்தார். வரும் அக்டோபர் மாதம் கனடா பார்லிமென்டிற்கு தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டின் பிரதமர் ஆக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் கூட்டணி கட்சி ஆதரவை வாபஸ் பெற்றது. நெருக்கடி ஏற்படவே, பிரதமர் பதவியில் இருந்தும், லிபரல் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக ட்ரூடோ அறிவித்தார். இதனையடுத்து, லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவீத வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் லிபரல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நடந்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில் அவர் பதவியேற்றார்.
The post கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி..!! appeared first on Dinakaran.