ARTICLE AD BOX
ஏழாம் வகுப்பு பயின்று வந்த சிறுமியை கடத்தி கற்பழித்த 4 பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சஹார் மாவட்டத்தில் 14 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். சிறுமி அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதனிடையே, சிறுமி சம்பவத்தன்று அங்குள்ள வயல்பகுதியில் இருக்கும் மோட்டார் பம்பில் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த 4 பேர் கும்பல், சிறுமியை கரும்பு கொல்லைக்குள் தூக்கிச் சென்றது.
இதையும் படிங்க: என் பொண்டாட்டி, மாமியார் கொடுமை தாங்கல.. இளைஞரின் மரண வாக்குமூல வீடியோ லீக்.. அதிரவைக்கும் சம்பவம்.!
கூட்டுப்பாலியல் வன்கொடுமை
அங்கு நால்வரும் சிறுமியிடம் கூட்டாக சேர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதனை வீடியோ எடுத்து, வெளியே கூறினால் குடும்பத்துடன் கொலை செய்திடுவோம் என மிரட்டி இருக்கிறார்.
வீட்டுக்கு வந்த சிறுமி பெற்றோரிடம் இதுகுறித்து கண்ணீருடன் கூறியுள்ளார். அவர்கள் புலந்த்சஹார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தர்மேந்திரா, அஜய், ஹரேந்திரா, நிதின் ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். எஞ்சியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இளைஞர்களின் கொண்டாட்டத்தால் சோகம்; 55 வயது நபர் மாரடைப்பால் பலி.!