ARTICLE AD BOX
தற்போது வாஷிங் மெஷின் வீட்டில் மிகவும் அத்தியாவசியமான ஒரு பொருளாக மாறிவிட்டது. துணிகளை துவைப்பதற்கும், ட்ரை செய்வதற்கும் உதவுகிறது, இது நமது வேலைகளை எளிதாக்குகிறது. எந்த ஒரு மிஷினையும் சரியாக பராமரித்தால் மட்டுமே நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கும். பொதுவாக பலரும் வாரம் ஒருமுறை மினிஷில் துணிகளை துவைக்கின்றனர்.
இதனால் நிறைய துணிகள் சேருகிறது. அதனை மொத்தமாக மிஷினில் போட்டு அடைத்து துவைக்கின்றனர். இந்த சமயத்தில் வாஷிங் மினிஷில் உள்ள வரம்பை மீறி துணிகளை போடும்போது மிஷினுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். அதிகசுமை காரணமாக மிஷின் பழுதாக வாய்ப்புள்ளது. இதற்கு நாம் பயன்படுத்தும் வாஷிங் மிஷின் பவுடர் கூட காரணமாக இருக்கலாம். அதற்கு தீர்வாக இணையத்தில் ஒரு ஐடியா பகிரப்பட்டது. அதனை காணலாம்.
தேவையான பொருட்கள்:
1. ரூ.10 ரின் பவுடர் (துணி துவைக்கும் பவுடர்)
2. குடிநீர் (ஒரு கப் அளவு )
3. பற்பொடி (ஏதேனும் ஒரு பேஸ்ட்)
4. சாம்ஃபூ (ஏதேனும் ஒரு பிராண்ட்)
செய்முறை:
ஒரு சிறிய கிண்ணத்தில் 10 ரூபாய் ரின் பவுடரை முழுவதுமாக கொட்டிவிட்டு, அதில் ஒரு கப் அளவு குடிநீரை சேர்க்க வேண்டும். அதனை நன்றாக சுழற்சி செய்துவிட்டு, அதனுடன் நாம் வீட்டில் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு பேஸ்டை கால் ஸ்பூன் அளவுக்கு சேர்த்து கிளற வேண்டும். தொடர்ந்து, 2 சிறிய பாக்கெட் ஷாம்ஃபூ சேர்த்து அதனை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சவும். கொஞ்சம் வெப்பநிலை மாறவும் அதனை ஒருபாட்டிலில் அடைத்து வைத்து துணி துவைக்கும்போது வாஷிங் மிஷினில் போட்டு பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால் துணிகள் சாயம் போகாமல் பார்த்துக் கொள்ளலாம் என்கின்றனர்.