14 மாத காயம், அதிவேகமாக 200 விக்கெட்டுகள்..! மனம் திறந்த ஷமி!

3 days ago
ARTICLE AD BOX

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார்.

சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2ஆவது வீரர், குறைந்த பந்துகளில் (5,126 பந்துகள்) 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் முகமது ஷமி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்துக்கு எதிரான நேற்றையப் (பிப்.20) போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முகமது ஷமி 10 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

விசுவாசத்துடன் இருக்க வேண்டும்

போட்டி முடிந்த பிறகு ஷமி பேசியதாவது:

ஐசிசி தொடர்களில் எனது ஓவர்களில் சிறிது ரன்கள் சென்றாலும் விக்கெட் விழுந்தால் எனக்கு சரியென்றே தோன்றும். ஏனெனில், அது அணிக்கு நல்லதாக முடியும். நான் எப்போதும் இப்படித்தான் நினைப்பேன்.

நான் எனது திறமையை முழுமையான விசுவாசத்துடன் முடிக்க முயற்சிக்கிறேன். நான் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நான் எப்போதும் நிகழ்காலத்தில் மட்டுமே இருக்க விரும்புகிறேன். சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்க முயற்சிக்கிறேன்.

காயத்தினால் இருந்தபோது இந்திய அணி முக்கியமான கட்டத்தில் இருக்கும்போது நான் அணியில் இருக்க வேண்டுமென நினைப்பேன். என்னால் உதவி செய்ய முடியுமென நம்புவேன்.

திறமையை நம்ப வேண்டும்

உள்ளூர் போட்டிகளில் விளையாடியது எனது நம்பிக்கையை அதிகரித்தது. 14 மாதங்களுக்குப் பிறகு என்ன மாறியிருக்கிறது என்பது அறிந்துகொள்ள அந்தப் போட்டிகள் உதவின.

நீங்கள் எப்போதும் உங்களது திறமையை நம்ப வேண்டும், உங்களையும் நம்ப வேண்டும். நான் எப்போதும் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துவேன். அதனால் எனக்கு மனநிலையில் எதுவும் மாறாது. கடினமாக நேரங்களில் நீங்கள் மாறாவிட்டால் கடினமான சூழ்நிலைகளிலும் மாறமாட்டீர்கள்.

எனது தந்தைதான் எனக்கு ரோல்மாடல். அவருக்குதான் பறக்கும் முத்தம் கொடுத்தேன் என்றார்.

Read Entire Article