ARTICLE AD BOX

இந்தியாவில் 119 ஆப்-களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதில் பெரும்பாலான ஆப்-கள் சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது என்றும், மற்ற சில ஆப்-கள் அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உருவாக்கப்பட்டவை என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஆப்-கள் அனைத்தும் வீடியோ மற்றும் குறள் அரட்டை ஆப்களாகும். தற்போது வரை வெறும் 15 ஆப்-கள் மட்டுமே பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.
மீதமுள்ள ஆப்-கள் மெல்ல மெல்ல அகற்றப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பல நிறுவனங்களுக்கு பெரிய வணிக இழப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதில் சில்சாட் சிங்கப்பூர் என்னும் ஆப். இது ஒரு பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் கொண்ட ஒரு பிரபலமான வீடியோ அரட்டை ஆப் ஆகும். இந்த ஆப்பை தடை செய்ய வேண்டும் என்று கூகிள் தெரிவித்துள்ளது. இதேபோன்று பல ஆப்-களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.