ARTICLE AD BOX
11 வருஷம்தான் ரூ.1 லட்சம் ரூ.4.45 கோடியானது.. வெயிட்டான லாபம் கொடுத்த டான்ஃபாக் இண்டஸ்ட்ரீஸ்..
வாரன் பஃபெட்டின் தலைமையிலான பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் துணைத் தலைவரும், அமெரிக்காவின் பிரபல தொழிலதிபருமான சார்லி முங்கர் முன்பு ஒரு முறை பேட்டி ஒன்றில், பங்குகளை வாங்குவதிலோ அல்லது விற்பதிலோ அல்ல, காத்திருப்பதில்தான் பெரிய பணம உருவாகும் என்று தெரிவித்தார். அதாவது பங்குகளை நீண்ட காலமாக வைத்திருந்தால் அது பெரிய செல்வத்தை அளிக்கும் சார்லி முங்கர் சொல்கிறார். அவர் சொல்வது உண்மைதான் என்பதை டான்ஃபாக் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் வரலாறு நமக்கு சொல்கிறது. 11 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 445 மடங்குக்கு மேல் ஆதாயம் கொடுத்துள்ளது.
டான்ஃபாக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அனுபம் ரசாயன் இந்தியா லிமிடெட் மற்றும் தமிழ் நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தால் நடத்தப்படும் ஒரு கூட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம், சல்பூரிக் அமிலம், ஓலியம்,அலுமினியம் ஃப்ளோரைடு,பொட்டாசியம் ஃப்ளோரைடு போன்ற ரசாயனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து நல்ல லாபம் ஈட்டி வருகிறது. மேலும், நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. உதாரணமாக 2014 பிப்ரவரி 21ம் தேதியன்று டான்ஃபாக் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை ரூ.8ல் நிறைவைடந்தது. கடந்த வெள்ளக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.3,566.45ஆக இருந்தது. ஆக, கடந்த 11 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 445 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. இதன்படி, 11 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் டான்ஃபாக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.4.45 கோடியாக வளர்ந்திருக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்த மல்டிபேக்கர் பென்னி பங்கின் விலை ரூ.20லிருந்து ரூ.3,566ஆக உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் டான்ஃபாக் இண்டஸ்ட்ரீஸ் பங்கு முதலீட்டாளர்களுக்கு 17,700 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 2,900 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலத்தில் இப்பங்கின் விலை ரூ.118லிருந்து ரூ.3,566ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.1,938.55லிருந்து ரூ.3,566ஆக உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு 80 சதவீதத்துக்கு மேல் ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இப்பங்கின் விலை 50 சதவீத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இப்பங்கின் விலை 20 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.
2025 பிப்ரவரி 5ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே டான்ஃபாக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.3,970ஐ எட்டியது குறி்ப்பிடத்தக்கது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் டான்ஃபாக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வருவாயாக ரூ.378.15 கோடி ஈட்டியிருந்தது. மேலும் அதே நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.52.48 கோடி சம்பாதித்துள்ளது.
Story Written: Subramanian