100 கோடி கிளப்பில் 10 படங்கள் கொடுத்த ஒரே ஒரு பாலிவுட் டைரக்டர் யார்?

4 hours ago
ARTICLE AD BOX

Rohit Shetty 10 Best Movies With 100 Crores : ரோஹித் ஷெட்டியின் 100 கோடி கிளப் படங்கள். பாலிவுட் டைரக்டர் ரோஹித் ஷெட்டிக்கு தற்போது 51 வயதாகிறது. ரோஹித்தின் அப்பா எம்.பி.ஷெட்டி 60-70 காலத்தில் ஸ்டண்ட் மேன் மற்றும் வில்லனாக இருந்திருக்கிறார். ரோஹித்தும் பாலிவுட்டில் நிறைய ஹிட் படம் கொடுத்திருக்கார். பாலிவுட் சினிமாவில் 10 படம் 100 கோடி கிளப்பில் சேர்த்த ஒரே இயக்குநர் இவர்தான். அதை பற்றி பாக்கலாம் வாங்க...

1. கோல்மால் 3

ரோஹித் ஷெட்டியோட முதல் 100 கோடி படம் 2010ல் வந்த கோல்மால் 3. இந்த படம் ரூ.167 கோடி வசூல் கொடுத்தது. இதில் அஜய் தேவ்கன், கரீனா கபூர், அர்ஷத் வார்சி, துஷார் கபூர் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

2. சிங்கம்

2011ல் திரைக்கு வந்த சூப்பர் ஹிட் படம் தான் சிங்கம். பாக்ஸ் ஆபீஸீல் 157.89 கோடி வசூல் குவித்தது. இதில் அஜய் தேவ்கன், காஜல் அகர்வால், பிரகாஷ் ராஜ் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

3. போல் பச்சன்

2012ல வந்த ரோஹித் ஷெட்டியோட போல் பச்சன் படமும் நல்லா கலக்குச்சு. இந்த படம் 165 கோடி வசூல் பண்ணுச்சு. இதுல அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன், அசின், பிராச்சி தேசாய் நடிச்சிருந்தாங்க.

4. சென்னை எக்ஸ்பிரஸ்

2013ல ஷாருக் கான், தீபிகா படுகோன், சத்யராஜ் நடிச்ச சென்னை எக்ஸ்பிரஸ் படம் பாக்ஸ் ஆபீஸ்ல வேற லெவல்ல இருந்துச்சு. ரோஹித் ஷெட்டியோட இந்த படம் 424 கோடி வசூல் பண்ணுச்சு.

5. சிங்கம் ரிட்டர்ன்ஸ்

ரோஹித் ஷெட்டியோட 2014ல வந்த சிங்கம் ரிட்டர்ன்ஸ் படம் பாக்ஸ் ஆபீஸ்ல நல்லா ஓடுச்சு. அஜய் தேவ்கன், கரீனா கபூர் நடிச்ச இந்த படம் 220.5 கோடி வசூல் பண்ணுச்சு.

6. தில்வாலே 

2015ல வந்த தில்வாலே படத்துல ஷாருக் கான், காஜோல், வருண் தவான், கீர்த்தி சனோன் நடிச்சிருந்தாங்க. இந்த படம் 376.85 கோடி வசூல் பண்ணுச்சு.

7. கோல்மால் அகெய்ன்

 கோல்மால் அகெய்ன் படம் 2017ல வந்துச்சு. இதுல அஜய் தேவ்கன், தபு, பரிணிதி சோப்ரா, அர்ஷத் வார்சி, துஷார் கபூர், குணால் கெமு நடிச்சிருந்தாங்க. இந்த படம் 310.9 கோடி வசூல் பண்ணுச்சு.

8. சிம்பா 

ரன்வீர் சிங், சாரா அலிகான், சோனு சூத் நடிச்ச சிம்பா படம் 2018ல வந்துச்சு. இந்த படம் பாக்ஸ் ஆபீஸ்ல 400.19 கோடி பிசினஸ் பண்ணுச்சு.

9. சூர்யவன்ஷி 

2021ல வந்த ரோஹித் ஷெட்டியோட சூர்யவன்ஷி படம் பாக்ஸ் ஆபீஸ்ல நல்லா கலக்குச்சு. அக்ஷய் குமார், கத்ரீனா கைஃப் நடிச்ச இந்த படம் 294.91 கோடி வசூல் பண்ணுச்சு.

10. சிங்கம் அகெய்ன்

2024ல வந்த ரோஹித் ஷெட்டியோட சிங்கம் அகெய்ன் படமும் நல்லா கலக்குச்சு. அஜய் தேவ்கன், கரீனா கபூர், டைகர் ஷெராஃப், அக்ஷய் குமார், ரன்வீர் சிங் நடிச்ச இந்த படம் 389.64 கோடி பிசினஸ் பண்ணுச்சு.

Read Entire Article