10 மாசத்துக்குள் அதை பார்க்கமலேயே 2 ஐசிசி கோப்பை.. இதாங்க தரமான இந்திய அணி.. ரோஹித் பெருமிதம் 

3 hours ago
ARTICLE AD BOX

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரை இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் தலைமையில் வென்ற இந்தியா தற்போது அடுத்த 10 மாதத்துக்குள் இரண்டாவது ஐசிசி கோப்பையை வென்றுள்ளது. தெரியப்படும் வகையில் அந்த 2 தொடர்களிலும் ஒரு போட்டியில் கூட இந்தியா தோல்வியே சந்திக்காமல் 2 கோப்பைகளை முத்தமிட்டுள்ளது.

இந்நிலையில் அப்படி தோல்வியை பார்க்காமலேயே 2 கோப்பைகளை வெல்லும் அளவுக்கு இந்திய அணியிடம் அபார திறமை இருப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா பெருமை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தோல்வியை சந்திக்காமல் நாங்கள் கோப்பைகளை வென்றுள்ளது மிகச் சிறந்த மைல்கள். அது இந்தியா எந்தளவுக்கு சிறந்த அணி என்பதைப் பேசுகிறது”

தரமான இந்தியா:

“2023 உலகக்கோப்பை ஃபைனலில் நாங்கள் தோல்வியை சந்தித்தோம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதன் பின் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் டி20 உலகக் கோப்பையை வென்ற நாங்கள் தற்போது சாம்பியன்ஸ் கோப்பையையும் வென்றுள்ளோம். அது இந்திய அணியின் திறமையைக் காண்பிக்கிறது. எங்கள் அணியில் நிறைய ஆழம் மற்றும் புரிதல் இருக்கிறது”

“அதனாலேயே அழுத்தம் என்பது வெளியே மட்டும் தான் இருக்கும் என்று சொன்னேன். நாங்கள் ஒரு தோல்வியை சந்தித்து விட்டால் உடனே நிறைய விமர்சனங்களும் பேச்சுகளும் காணப்படும். ஆனால் எங்களுடைய வீரர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் எப்படி மகிழ்ச்சியுடன் விளையாடி வெற்றி பெறலாம் என்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள். அதுவே 2 – 3 வருடங்களாக எங்களுடைய முக்கிய சிறப்பம்சமாக இருக்கிறது”

ரோஹித் பெருமிதம்:

“ஒரு தோல்வியைக் கூட பெறாமல் 2 ஐசிசி கோப்பைகளை வென்றது அற்புதமான சாதனை. இப்படி தோல்வியை சந்திக்காமல் வெற்றி பெற்ற சில அணிகளை மட்டுமே பார்த்துள்ளேன். வருங்காலத்தில் எந்தத் திட்டமும் இல்லை நடப்பது நடக்கட்டும். 2023 உலகக் கோப்பை தோல்விக்கு பின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்”

இதையும் படிங்க: ஜீரோவாக வீட்டுக்கு அனுப்பப்பட்ட அதே துபாயில்.. ஹீரோவாக நாட்டுக்காக கோப்பை வென்ற வருண்.. டாப் சாதனை

“கடைசி ஓவர் வரை வெற்றியை விடக்கூடாது என்பதையே நாங்கள் எப்போதும் பேசுவோம். எங்கள் அணியில் இருக்கும் முதல் நபர் முதல் கடைசி நபர் வரை தங்களது வழியில் வெற்றியை பெற்றுக் கொடுக்கும் திறமை கொண்டவர்கள். ஒருவர் மட்டும் ரன்கள் அடித்தார் என்று அர்த்தமல்ல. எங்கள் அணியில் இருக்கும் அனைவரும் வெற்றியில் தங்களுடைய பங்கை ஆற்றியுள்ளனர்” எனக் கூறினார்.

The post 10 மாசத்துக்குள் அதை பார்க்கமலேயே 2 ஐசிசி கோப்பை.. இதாங்க தரமான இந்திய அணி.. ரோஹித் பெருமிதம்  appeared first on Cric Tamil.

Read Entire Article