ARTICLE AD BOX
பத்து பேருடன் படுப்பேன், தம் அடிப்பேன், கஞ்சா அடிப்பேன் என்பதுதான் பெண்களுக்கான சம உரிமையா? என்று நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சனம் ஷெட்டி ஆவேசமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான "Bad Girl" திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த படம் குறித்த தனது கருத்தை நடிகை சனம் ஷெட்டி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: "Bad Girl" திரைப்படம் ஒரு கெட்ட உதாரணம். சம உரிமை என்பது பத்து பேருடன் படுப்பேன், தம் அடிப்பேன் , கஞ்சா அடிப்பேன் என்பதல்ல. ஆண்களுக்கு இணையாக சம வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைப்பதே உண்மையான சம உரிமை.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூகத்தில் சமமாக வாய்ப்புகள் இருக்கிறதா? இல்லை. திரை உலகை பொருத்தவரை, ஹீரோவுக்கு உள்ள சம்பளமும், ஹீரோயினுக்கு உள்ள சம்பளமும் ஒன்றல்ல.
ஒரு ஹீரோவை அணுகும் விதமும், ஒரு ஹீரோயினை அணுகும் விதமும் ஒன்றாக இல்லை. என் வாழ்க்கையில் நான் அனுபவித்ததைச் சொல்கிறேன். எங்களை படங்களில் நடிக்க அழைக்கிறார்கள் என்று பார்த்தால், படுக்கவும் அழைக்கிறார்கள். நிலைமை இப்படித்தான் இருக்கிறது.
இதில்தான் சம உரிமை வேண்டும். இதைப் பற்றியே பேசுங்கள். ஸ்கூல் பொண்ணுங்களை வைத்து "பத்து பேருடன்" படு, கஞ்சா அடி, தம் அடி என்று சொல்வதை சம உரிமை என்று கூற முடியுமா?"
இத்தகைய மோசமான படத்தை பெரிய மனிதர்கள் பாராட்டுவது எனக்குத் தாங்க முடியவில்லை," என்றும் சனம் ஷெட்டி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.