ARTICLE AD BOX
1 கப் கோதுமை மாவை வெச்சு.. காலையில 10 நிமிடத்தில் இந்த தோசை சுடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..
Wheat Onion Dosa: காலையில் தோசை சுட மாவு இல்லையா? சிம்பிளா காலை டிபனை செய்யணுமா? அப்ப ஒரு கப் கோதுமை மாவு இருந்தால், அதைக் கொண்டு, அருமையான சுவையில் தோசை சுடலாம். அதுவும் வழக்கமாக சுடும் கோதுமை தோசைப் போன்று சுடாமல், அந்த மாவுடன் வெங்காயம், கேரட் போன்ற பொருட்களை வதக்கி சேர்த்து தோசை சுடுங்கள்.
இதனால் தோசை இன்னும் சுவையாக இருக்கும். இந்த தோசைக்கு தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும். முக்கியமாக வேலை செல்வோர் காலையில் செய்ய ஏற்றவாறு ஈஸியாக இருக்கும். பேச்சுலர்களும் இந்த தோசையை ட்ரை செய்யலாம். அந்த அளவில் ஈஸியாக இருக்கும்.
உங்களுக்கு கோதுமை வெங்காய தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை வெங்காய தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* ரவை - 2 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* வரமிளகாய் - 4
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை மற்றும் அரிசி மாவை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு
கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்
* பின்பு மிக்சர் ஜாரில் பூண்டு, இஞ்சி, வரமிளகாய், சீரகம் சேர்த்து
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், தக்காளி சேர்த்து,
சிறிது உப்பு தூவி 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைத் தூவி வதக்கி
இறக்கி, கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்க்க வேண்டும்.
* பின் அத்துடன் அரைத்து வைத்துள்ள பூண்டு கலவையையும் சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள
மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் சேர்த்து, முன்னும் பின்னும் வேக
வைத்தால், சுவையான கோதுமை வெங்காய தோசை தயார்.