ARTICLE AD BOX
1,35,000 ஆப்-களை ஆப் ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கிய ஆப்பிள்.. காரணத்தை பாத்தீங்களா?
ஆப்பிள் நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆப் ஸ்டோரில் இருந்து 1,35,000-த்திற்கும் அதிகமான ஆப்-களை அதிரடியாக நீக்கியுள்ளது. இதற்கான காரணம் என்னவென்றால் இந்த அப்ளிகேஷன்களை உருவாக்கிய டெவலப்பர்கள், நிறுவனங்களின் தகவல்கள் குறித்து வழங்கவில்லை. டிஜிட்டல் சர்வீசஸ் ஆக்ட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளின்படி ஆப்களை வெளியிடும் வணிகர்கள், நிறுவனங்கள், தங்களது முகவரி, மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரி போன்ற கான்டக்ட் விவரங்களை ஆப்பிளுக்கு வழங்க வேண்டும். இந்த தகவல்கள் ஆப் ஸ்டோரில் அந்தந்த ஆப்=களின் பக்கத்தில் வெளியிடப்படும்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்படி நடவடிக்கை எடுக்கும் போது பல ஆப்ஸ்களுக்கு தடையும் விதித்துள்ளது.

பொதுவாக ஒரு ஆப், ஆப் ஸ்டோரில் பப்ளிஷ் செய்யப்பட்டால், அவை எந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்ற தொடர்பு விவரங்கள் இருக்கும். தங்களுடைய காண்டாக்ட் விவரங்களை வழங்க தவறிய நிறுவனங்களின் அப்ளிகேஷன்களை தான் ஆப்பிள் நிறுவனம் ரத்து செய்துள்ளது. ஆப் ஸ்டோர் தொடங்கப்பட்டதிலிருந்து ஆப்பிள் நிறுவனம் அதிக அளவிலான ஆப்-களை அதிரடியாக நீக்குவது இதுவே முதல் முறை.
இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நடவடிக்கையாக ஆப்பிள் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இனி சரிபார்ப்பு நடவடிக்கையை முடிக்கும் வரை ஆப்-கள் அகற்றப்பட்ட நிலையில் தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்யும்போது பயனர்கள் அந்த ஆப்-பின் முகவரி தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை பார்க்கக்கூடும். ஐரோப்பிய ஒன்றிய விதிகளின்படி டெவலப்பர்கள் தங்கள் தொடர்பு விவரங்களை வழங்க வேண்டும். அப்படி தொடர்பு விவரங்கள் கொடுக்கப்படவில்லை என்றால் அத்தகைய அப்ளிகேஷன்கள் நீக்கப்படும். குறிப்பாக பயனர்களுக்கு வெளிப்படை தன்மையை வழங்குவதற்காக தான் இந்த நடவடிக்கை. தகவலறிந்து டவுன்லோட் செய்யும்போது எந்தவித மோசடி சம்பவங்களிலும் பயனர்கள் சிக்காமல் இருக்கவும் இது உதவும்.
ஆப்பிள் நிறுவனம் பல்வேறு எச்சரிக்கைகளை வழங்கிய பிறகுதான் தற்போது இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. பிப்ரவரி 17-ஆம் தேதிதியான திங்கட்கிழமைக்குள் டெவலப்பர்கள் தங்களுடைய தொடர்பு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்கு இணங்க விவரங்களை வழங்கவில்லை என்றால், அத்தகைய ஆப்-கள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்படும் என்ற எச்சரிக்கை அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. அதையும் மீறி விவரங்களை வழங்காத ஆப்-கள் தான் தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது.