ARTICLE AD BOX
Vel Murugan Assembly Issue: சென்னை தலைமைச் செயலகத்தில் 2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உள்ளே தமிழ் வழி கல்வியில் பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு இருந்த நிலையில், அது பறிபோய் உள்ளது என்றும் அதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசினார்.
Vel Murugan Assembly Issue: சேகர்பாபு vs வேல்முருகன்
மேலும் தெலுங்கானாவில் தனியார் பள்ளிகள் மத்திய அரசின் பள்ளிகள் என அனைத்து பள்ளியிலும் தெலுங்கு மொழி பாடம் கட்டாயம் என கூறியுள்ளது. அதே போல தமிழ்நாட்டிலும் கொண்டு வர வேண்டும் என பேச முயற்சித்தார். ஆனால் அப்போது குறிப்பிட்ட அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசி கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தார்.
Vel Murugan Assembly Issue: வேல்முருகனை கண்டித்த முதல்வர் ஸ்டாலின்
இதைக் கேட்ட வேல்முருகன் கோபமடைந்து தன்னை ஒருமையில் பேசியது தவறு என சுட்டிக்காட்டினார். இந்நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக சேகர்பாபுவிற்கு ஆதரவாக பேசினார்.
மேலும், முதல்வர் ஸ்டாலின், "வேல்முருகன் பேசுகிறார் என்றால் நல்ல கருத்துக்களை சொல்லக்கூடியவர். அவர் பேசுகிறார் என்றால் அமைதியாக அமர்ந்து கேட்பேன். சில நேரங்களில் அதிகப் பிரசிங்கித் தனமாக நடந்து கொள்வது வேதனையாக இருக்கிறது. இடத்தை விட்டு எழுந்து வந்து கூச்சல் போடுவது முறையல்ல. சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
Vel Murugan Assembly Issue: சபாநாயகர் அப்பாவு பேசியது என்ன?
இதையடுத்து பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு,"வேல்முருகன் இருக்கையை விட்டு வெளியே வந்து ஒருமையில் பேசியது மற்றும் கை நீட்டி பேசியது நாகரீகமான செயல் அல்ல. இது ஏற்றுக் கொள்ள முடியாது. வேல்முருகன் இதனை திருத்திக்கொள்ள வேண்டும். இந்த ஒருமுறை மன்னிக்கிறோம். இது போல யார் நடந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். வேல்முருகன் பேசியதும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
Vel Murugan Assembly Issue: முதலமைச்சரின் பேசியது வருத்தம் அளிக்கிறது - வேல்முருகன்
இதையடுத்து, சட்டப்பேரவையில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளிநடப்பு செய்தார். வெளியே வந்த வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் தமிழ் எங்கு உள்ளது. பெயர் பலகையில் தமிழ் இருக்க வேண்டும், ஆட்சியில் தமிழ் இருக்க வேண்டும், அலுவல் மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என பேச முற்பட்டதை முறையாக புரிந்து கொள்ளாமல் அமைச்சர் சேகர்பாபுவும், முதலமைச்சரும் தன்னை அதிகப் பிரசிங்கித்தனமாக போல பேசுவதாக விமர்சித்தது தனக்கு வருத்தம் அளிக்கிறது.
Vel Murugan Assembly Issue: சபாநாயகர் முன்பு போனது ஏன்?
மேலும் தெலுங்கானாவில் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அன்று அன்று சிபிஎஸ்சி மற்றும் அயல்நாட்டு பாடத்திட்ட பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி பாடம் கட்டாயம் என கூறியுள்ளது. அதை ஏன் தமிழ்நாட்டில் செய்ய மறுக்கிறார்கள் என்றுதான் பேச முற்பட்டேன். ஆனால் அதற்கு கூட வாய்ப்பு அளிக்காத சபாநாயகர் தன்னை பேச அனுமதிக்க மறுத்துவிட்டார். அதனால் தான் சபாநாயகர் முன்பு போய் நின்று தனக்கு பேச வாய்ப்பு அளிக்குமாறு கேட்டேன்.
Vel Murugan Assembly Issue: 'என்ன நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை'
20 சதவீதம் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலையில் இட ஒதுக்கீடு என்று இருந்த அரசாணையை ரத்து செய்துவிட்டனர். அதன் பிறகு அதற்காக வழக்கு தொடர்ந்து அந்த வழக்கில் சாதித்தவன் வேல்முருகன் என்ற அடிப்படையில் இன்று சட்டப்பேரவையில் பேச முற்பட்டேன். மேலும் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்து கொள்ளாமல் முதலமைச்சர் தன்னை விமர்சித்திருப்பது வருத்தமளிக்கிறது.
தாய்மொழி தமிழுக்காக தன் உயிரையும் துறக்க நான் தயாராக இருக்கிறேன். தற்போது உள்ள சூழலில் தமிழ்நாட்டில் நீடிக்குமானால் அடுத்த 25 ஆண்டுகளில் வட இந்தியர்கள் தான் தமிழ்நாடு அரசு பணிகளில் பணியாற்ற முடியும். தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை தான் நான் வலியுறுத்தினேன். அதைக் கூட வலியுறுத்த கூடாது என்றால் நான் கோஷமிடுவேன். தமிழிற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன். சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுத்தாலும் கவலை இல்லை" என்றார்.
மேலும் படிக்க | முக ஸ்டாலின் விரைவில் கைது செய்யப்படுவாரா? - கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்!
மேலும் படிக்க | சென்னையில் விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர பயண அட்டை பெறுவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ