ARTICLE AD BOX
Published : 24 Feb 2025 09:21 PM
Last Updated : 24 Feb 2025 09:21 PM
வெள்ளியங்கிரி மலையில் ஏற்றப்பட்ட தவெக கொடி அகற்றம்!

கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏற்றப்பட்ட தமிழக வெற்றிக்கழக கொடியை வனத்துறையினர் அகற்றினர்.
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி பகுதியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. மகா சிவாராத்திரியை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் 7-வது மலை உச்சியில் சுயம்பு லிங்கமாக உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை பக்தர்கள் மலை ஏறி தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், தவெக கட்சி தொண்டர் ஒருவர் 7-வது மலையில் கட்சி கொடியை ஏற்றிவிட்டு வந்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள்,வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இதுகுறித்து ஆலாந்துறை போலீஸார் மற்றும் போளுவாம்பட்டி வனத்துறையினர் விசாரித்து வந்தனர். இதனிடையே, கோவை வனக்கோட்ட அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் மலைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் உள்ள வேட்டை தடுப்புக் காவலர்கள் உள்ளிட்டோர் கட்சி கொடியை அகற்றினர். மேலும், வெள்ளியங்கிரி மலையில் தவெக கொடி ஏற்றியது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- PM Kisan: 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடி நிதி விடுவிப்பு!
- விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் டோல்கேட் கட்டண வசூல் தொடக்கம்: கிராம மக்கள் வாக்குவாதம்
- இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
- கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ‘ஃபேஸ் கேப்ச்சர்’ முறையை மத்திய அரசு கைவிட வலியுறுத்தல்