விட்ராதீங்க சார்.. ரூ.4000 கம்மி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

8 hours ago
ARTICLE AD BOX

விட்ராதீங்க சார்.. ரூ.4000 கம்மி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

Mobile
oi-Harihara Sudhan
| Published: Tuesday, March 4, 2025, 18:14 [IST]

நத்திங் பிரியர்கள் எதிர்பார்த்த நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) மாடல்கள் இந்தியாவில் களமிறங்கிவிட்டன. இந்த மாடல்கள் மீது கவனம் இருக்கும் நேரத்தில் ரூ.4,000 விலை கம்மியாக நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) கிடைக்கிறது. இந்த மாடலுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் எவ்வளவு? பீச்சர்கள் எப்படி இருக்கிறது?

டிரான்ஸ்பரன்ட் பாடி (Transparent Body) மற்றும் கிளைப் இன்டர்பேஸ் (Glyph Interface) டிசைன் கொண்ட மாடல்களில் நத்திங் பட்டையை கிளப்புகிறது. இதில் நத்திங் போன் 2ஏ மார்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போதும், விற்பனையில் பின்னி எடுக்கிறது. இந்த விற்பனையை சூடு பிடிக்க வைக்கும்படி ரூ.4,000 டிஸ்கவுண்ட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

விட்ராதீங்க சார்.. ரூ.4000 கம்மி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே போன்!

நத்திங் போன் 2ஏ அம்சங்கள் (Nothing Phone 2a Specifications): இந்த நத்திங் போனில் பிளாட் டிஸ்பிளே டிசைனில் 6.7 இன்ச் (2412×1084 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் மற்றும் புல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது.

மேலும், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஆகவே, ஓடிடி மட்டுமல்லாமல் கேமிங் அவுட்புட்டிலும் பிரீமியம் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், இந்த பீச்சர்களுடன் எச்டிஆர்ட்10 பிளஸ் (HDR10+) மற்றும் 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது.

மேலும், 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஒரு வருட பழைய மாடலாக இருந்தாலும், 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. இதுபோக 4 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. கிளைப் இன்டர்பேஸ் நேட்டிபிகேஷன்களுக்கு ஏற்ப நத்திங் ஓஎஸ் 2.5 (Nothing OS 2.5) கிடைக்கிறது.

இந்த நத்திங் போன் 2ஏ போனில் ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 ப்ரோ (Octa Core 4nm MediaTek Dimensity 7200 Pro) சிப்செட் மற்றும் மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக கிடைக்கும் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா டூயர் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.

இந்த கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization), எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization), 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த நத்திங்கில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கிடைக்கிறது.

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Optical Fingerprint Scanner), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் IP54 ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த நத்திங் போன் 2ஏ போனில் பிரீமியம் லுக் கொடுக்கும்படி பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) கலர்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன.

இந்திய மார்கெட்டில் வெளியான போது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆக இருந்தது. ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் ரூ.21,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இதுபோக கூடுதலாக ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.4,000 டிஸ்கவுண்ட்டில் ஆர்டர் செய்யலாம். ரூ.19,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Nothing Phone 2a Gets Discount on Flipkart Sale Check New Price After Nothing Phone 3a Launch
Read Entire Article