ARTICLE AD BOX
வந்தாச்சு.. வந்தாச்சு.. டபுள் AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 5600mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
போல்டபிள் ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ஓப்போ ஃபைண்ட் என்5 (OPPO Find N5) போனானது, பிரீமியம் பீச்சர்களுடன் களமிறங்கி இருக்கிறது. டபுள் அமோலெட் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், ஓஐஎஸ் டெக்னாலஜி, பெரிஸ்கோப் டெலிபோட்டோ, ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம், 1 டிபி மெமரி 5600mAh பேட்டரி, 80W சூப்பர்வூர் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஓப்போ ஃபைண்ட் என்5 போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
போல்டபிள் போன்களில் அல்ட்ரா ஸ்லிம் பாடியில் இந்த ஃபைண்ட் என்5 மாடல் கிடைக்க இருக்கிறது. ஏனென்றால், அன்போல்ட் செய்த பிறகு வெறும் 4.21 மிமீ தடிமன் மட்டுமே வருகிறது. அதேபோல போல்ட் செய்தாலும் 8.93 மிமீ தடிமன் மட்டுமே இருக்கிறது. அதுமட்டுமல்லாம்ல, 8.12 இன்ச் டிஸ்பிளே, 5600mAh பேட்டரி இருப்பினும், 239 கிராம் எடை மட்டுமே வருகிறது.

ஏரோஸ்பேஸ்-கிரேடு 5 டைட்டானியம் அலாய் கொண்ட டைட்டானியம் ஃபிலெக்சன் ஹின்ஜ் (Titanium Flexion Hinge) கிடைக்கிறது. ஆகவே, டிசைனிலும் பிரீமியம் டெக்னாலஜிகள் மற்றும் லுக் கொடுக்கிறது. இதுபோக ஏஐ பீச்சர்களை கொண்ட கலர்ஓஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. இப்போது, டிஸ்பிளே, கேமரா, சிப்செட், பேட்டரி பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.
ஓப்போ ஃபைண்ட் என்5 அம்சங்கள் (OPPO Find N5 Specifications): இந்த ஓப்போவில் 6.62 இன்ச் (2616 x 1140 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த அவுட்டர் டிஸ்பிளேவில் அல்ட்ரா-தின் நானோகிரிஸ்டல் கிளாஸ் (Ultra-Thin Nanocrystal Glass) பாதுகாப்பு வருகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 2450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இதுபோக 8.12 இன்த் (2480 x 2248 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே உள்ளது. இந்த இன்னர் டிஸ்பிளேவில் அல்ட்ரா-தின் கிளாஸ் (Ultra Thin Glass) பாதுகாப்பு மட்டுமல்லாமல், 2K ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

இந்த பெரிய டிஸ்பிளேவில் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இந்த ஓப்போ ஃபைண்ட் என்5 போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஏஐ சம்மரி, ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர் போன்ற பீச்சர்களை கொடுக்கும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. இந்த ஓப்போ ஃபைண்ட் என்5 போனில் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
எலைட் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core 3nm Snapdragon 8 Elite) சிப்செட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த டெலிபோட்டோவில் 6X ஆப்டிகல் ஜூமிங், 30X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது.
இதுவொரு ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் மாடலாகும். ஆகவே, பிரீமியம் போட்டோகிராபி அவுட்புட் எதிர்பார்க்கலாம். 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் IPX6, IPX8 மற்றும் IPX9 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 5600mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 50W ஏர்வூக் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.
மிஸ்டி ஒயிட் (Misty White), காஸ்மிக் பிளாக் (Cosmic Black), டஸ்க் பர்பிள் (Dusk Purple) கலர்கள் இருக்கின்றன. 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.1,07,045ஆக இருக்கிறது. 16 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.1,18,935ஆகவும், 16 ஜிபி + 1 டிபி மாடலின் விலை ரூ.1,30,830ஆகவும் இருக்கிறது. சீனாவில் வெளியாகி இருக்கிறது. பிப்ரவரி 26ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது.