ARTICLE AD BOX
Published : 10 Mar 2025 08:27 PM
Last Updated : 10 Mar 2025 08:27 PM
ரூ.100 டேட்டா பிளானில் 90 நாளுக்கு ‘ஜியோ ஹாட்ஸ்டார்’ - ஜியோ சந்தா அறிமுகம்

மும்பை: இந்தியாவில் ரூ.100-க்கு ஜியோ ப்ரீபெய்ட் சிம் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு ‘ஜியோ ஹாட்ஸ்டார்’ சந்தாவை பெறுகின்ற வகையில் ரீசார்ஜ் பிளானை ஜியோ டெலிகாம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்திய டெலிகாம் நிறுவனங்களில் முதன்மையானதாக திகழும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது ரிலையன்ஸ் ஜியோ. கடந்த 2016-ல் தான் இந்த நிறுவனம் பொது பயன்பாட்டுக்கு சேவையை வழங்கி வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் டெலிகாம் சந்தையில் கிடுகிடுவென வளர்ச்சி கண்டது. அதற்கு காரணம் அந்த நிறுவனத்தின் ஆரம்ப கால ரீசார்ஜ் திட்டங்கள். இப்போதும் மற்ற தனியார் நிறுவனங்களை ஒப்பிடும் போது ஜியோவின் ரீசார்ஜ் கட்டணம் சற்று மலிவாக உள்ளது.
இந்த நிலையில், ரூ.100-க்கு புதிய திட்டம் ஒன்றை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இதை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். இந்த திட்டத்தின் மூலம் 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை பயன்படுத்தலாம். கூடுதலாக 5ஜிபி டேட்டா இதில் வழங்கப்படுகிறது. மற்றபடி வாய்ஸ், எஸ்எம்எஸ் போன்றவை இதில் இல்லை. இது டேட்டா ஒன்லி பிளான். இதில் டிவி நிகழ்ச்சிகள், திரைப்படம் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை பயனர்கள் பார்க்கலாம்.
கடந்த மாதம் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் ஜியோ சினிமாவை ரிலையன்ஸ் ஜியோ இணைத்தது, ஓடிடி ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கி வருகிறது. வரும் 22-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் சீசன் மே 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதை கருத்தில் கொண்டு இந்த பிளானை ஜியோ அறிமுகம் செய்துள்ளதாக தகவல்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- தர்மேந்திர பிரதானுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் - நடந்தது என்ன?
- காமராஜர் பல்கலை. பேராசிரியருக்கு எதிராக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் - காரணம் என்ன?
- அதிகாரிகள் மிரட்டுவதாக தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் குற்றச்சாட்டு
- “தமிழக மக்களிடம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்புக் கேட்க வேண்டும்” - பெ.சண்முகம்