ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

10 hours ago
ARTICLE AD BOX

Published : 26 Feb 2025 06:48 AM
Last Updated : 26 Feb 2025 06:48 AM

ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

<?php // } ?>

சென்னை: ரம்​ஜான் நோன்பு கடைப்​பிடிக்​கப்​படும் நாட்​களுக்கு மட்டும் பள்ளிவாசல்​களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்​டா​லின் உத்தர​விட்​டுள்​ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: புனித ரம்ஜான் மாதத்​தில் நோன்பு நோற்​கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்​புக் கஞ்சி தயாரித்து வழங்​கு​வதற்காக பள்ளிவாசல்​களுக்கு பச்சரிசி, தமிழக அரசால் வழங்​கப்​பட்டு வருகிறது. கடந்த ஆண்டு​களைப் போலவே, இந்த ஆண்டும் ரம் ஜான் மாதத்​தில் நோன்​புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்​களுக்கு அரிசி வழங்க வேண்​டும் என்று இஸ்லாமிய மக்களிட​மிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

எனவே, இந்த ஆண்டு ரம்ஜான் மாதத்​தில் நோன்பு நோற்​கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்​ப​தற்கு ஏதுவாக பள்ளிவாசல்​களுக்கு மொத்த அனும​தி​யின் கீழ் நோன்பு கடைபிடிக்​கப்​படும் நாட்​களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க முதல்வர் ஸ்டா​லின் உத்தர​விட்​டுள்​ளார். பள்ளிவாசல்​களுக்​குத் தேவைப்​படும் அரிசிக்கான மொத்த அனும​தியை வழங்க மாவட்ட ஆட்சி​யர்​களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்​கப்​பட்​டுள்ளன. இதன்படி 7,920 டன் அரிசி பள்ளிவாசல்​களுக்கு வழங்​கப்படும். இதனால் அரசுக்கு ரூ.18.41 கோடி கூடு​தல் செலவு ஏற்​படும். இவ்​வாறு அ​தில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article