மாதம்பட்டி ரங்கராஜன் பற்றிய வதந்திகளுக்கு மனைவி போட்ட போஸ்ட்.. அதிலும் அந்த வீடியோ க்யூட்!

3 hours ago
ARTICLE AD BOX

மாதம்பட்டி ரங்கராஜன் பற்றிய வதந்திகளுக்கு மனைவி போட்ட போஸ்ட்.. அதிலும் அந்த வீடியோ க்யூட்!

Television
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையல் கலைஞராகவும் நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜன் பற்றிய வதந்திகள் சில நாட்களாகவே பரவி வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவருடைய மனைவி ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார்.

பிரபலங்கள் வீட்டு சமையல் என்றாலே அங்கு மாதம்பட்டி ரங்கராஜன் சமையல் இடம் பிடித்து விடுகிறது. மாதம்பட்டி ரங்கராஜன் யூடியூப் சேனலில் ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் தமிழ் சினிமாவிலும் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.

Vijay TV Madhampatti Rangarajan

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம்

அந்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனாலும் அதைத்தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் எதுவும் பெரியதாக வரவில்லை. அதே நேரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு நடுவர் பதவியை கொடுத்தது. அந்த நிகழ்ச்சியில் கலகலப்பான ஒரு நடுவராக வந்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

குக் வித் கோமாளி நடுவர்

அமைதியாக இருந்தாலும் சில இடங்களில் இவர் போடும் கவுண்டர் பலருடைய ஃபேவரிட் ஆகவும் இருந்தது. சினிமா மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய குடும்ப பிசினஸ் ஆன சமையல் கலையில் ஆர்வம் காட்டி அதிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். தமிழ் சினிமா பிரபலங்கள் பலருடைய வீட்டு விசேஷங்களில் மாதம் பட்டி ரங்கராஜ் கேட்டரிங் அழைப்பது வாடிக்கையாக இருக்கிறது.

மாதம்பட்டி ரங்கராஜன் பற்றிய சர்ச்சை

அதுபோல சில மாதங்களாகவே மாதம்பட்டி ரங்கராஜன் பற்றிய சர்ச்சைகள் வலம் வந்து கொண்டே இருக்கிறது. ரங்கராஜன் ஏற்கனவே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர். ஆனாலும் கடந்த சில நாட்களாக மாதம்பட்டி ரங்கராஜன் காஸ்டியூம் டிசைனர் ஜாய் கிறிஸ்டியை காதலிக்கிறார் என்ற செய்திகள் வைரலாகி வருகிறது.

Vijay TV Madhampatti Rangarajan

புரியாத புதிர்

இந்த வதந்திக்கு வலுக்கொடுக்கும் வகையில் ஜாய் தன்னுடைய instagram பக்கத்தில் தொடர்ச்சியாக ரங்கராஜன் உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். காதலர் தினத்தில் அவர் தனக்கு கிப்ட் கொடுத்ததாகவும் சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். அதுபோல ஜாய் தன்னுடைய பெயருக்கு பின்னால் ரங்கராஜன் என்பதையும் சேர்த்து இருக்கிறார்.

மனைவியின் பதிலடி

ரங்கராஜன் தான் தன்னுடைய உயிர் என்றும் சில போஸ்ட்டுகளில் பகிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் தான் ரங்கராஜன் அவருடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஜாயை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? என்று இணையத்தில் எழுந்து வந்த கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரங்கராஜனின் மனைவி ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்.

Vijay TV Madhampatti Rangarajan

மாதம்பட்டி ரங்கராஜன் மனைவி

அதாவது கடந்த 11 வாரங்களுக்கு முன்பு தன்னுடைய இரண்டு மகன்கள் மற்றும் மாதம்பட்டி ரங்கராஜன் உடன் இருக்கும் புகைப்படத்தை ஸ்ருதி பகிர்ந்து இருக்கிறார். அதுபோல சில நாட்களாக வதந்திகள் பரவி வரும் நிலையில் தான் பகிர்ந்த பழைய பதிவில் "ஆமாம் நான் மாதம்பட்டி ரங்கராஜரின் மனைவி தான்" என்று ஒரு கமெண்ட் மூன்று நாட்களுக்கு முன்பு கொடுத்திருக்கிறார்.

Vijay TV Madhampatti Rangarajan

இதற்கு விஜய் டிவி பிரபலமான குரோஷி வாழ்த்துக்கள் தெரிவிப்பது போன்று கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதுபோல இன்னொரு பதிவில் ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக ஸ்ருதி போயிருக்கிறார். அங்கு உள்ள கல்லூரி மாணவர்கள் மாதம்பட்டி ரங்கராஜன் நடித்த மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் இடம் பெற்ற "கோடி அறுவி கொட்டுதே உன் மேல" என்ற பாடலை ஒழிக்க விட்டு அதை ஸ்ருதியை பார்த்து பாடி இருக்கிறார்கள்.

கோடி அருவி பாடல்

அப்போது ஸ்ருதி வெட்கப்பட்டு சிரித்து இருக்கிறார் அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மாதம்பட்டி ரங்கராஜனை டேக் செய்து இருக்கிறார். அதுபோல கடந்த ஜனவரி 31ம் தேதி மாதம்பட்டி ரங்கராஜன் குடும்பத்தில் நடந்த பங்க்ஷனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

Vijay TV Madhampatti Rangarajan

வழக்கறிஞராக இருக்கும் ஸ்ருதி தன்னுடைய கணவர் மாதம்பட்டி ரங்கராஜன் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

More From
Prev
Next
English summary
Madhampatti Rangarajan: Rumors about Madhampatti Rangarajan, who have been mixing as a culinary artist and actor, have been spreading for a few days. To put an end to that, his wife, Shruti, posted a post on his Instagram page.
Read Entire Article