ARTICLE AD BOX
ரமலான் ஸ்பெஷல் பாரம்பரியமான பள்ளிவாசல் நோன்பு கஞ்சியை எப்படி செய்யணும் தெரியுமா?
Ramadan Nombu Kanji Recipe In Tamil: புனிதமான ரமலான் மாதத்தில் இஸ்லாமிய நண்பர்கள் பகல் வேளையில் நோன்பு இருந்து, மாலை வேளையில் நோன்பை முடிக்கும் போது பள்ளிவாசலில் நோன்பு கஞ்சியை வாங்கி குடித்து நோன்பை துறப்பார்கள். இந்த நோன்பு கஞ்சி மிகவும் சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட.
இந்த நோன்பு கஞ்சியின் மணமே ஒருவரை ஈர்த்து, குடிக்கத் தூண்டும். அந்த அளவில் இதன் மணம் அருமையாக இருக்கும். உங்களுக்கு இந்த நோன்பு கஞ்சி ரொம்ப பிடிக்குமா? இதை உங்கள் வீட்டில் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

ஏனெனில் கீழே நோன்பு கஞ்சியை எப்படி செய்வதென்று என்றும், அதன் செய்முறையும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த ரமலான் மாதத்தில் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - சிறிய துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 4
* பிரியாணி இலை - 1
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5
* பூண்டு - 5 பல்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மட்டன் கொத்துக்கறி - 100 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சரிசி - 1 கப்
* பாசிப்பருப்பு - 1 கைப்பிடி
* தண்ணீர் - 5 கப்
* அரைத்த தேங்காய் - 3 டீஸ்பூன்
* புதினா - சிறிது
* சுடுநீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் 1 கப் பச்சரிசி மற்றும் 1 கைப்பிடி பாசிப்பருப்பை நீரில்
20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெந்தயத்தை சேர்த்து கிளறி, அதன் பின் தட்டி வைத்துள்ள
சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாயை உடைத்து சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் 1 கைப்பிடி புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மட்டன் கொத்துக்கறியை கழுவி சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி, நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ஊறு வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை கழுவி
சேர்த்து, ஒரு முறை கிளறி, பின் 5 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி
4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நன்கு கிளறி விட வேண்டும். பின்
அதில் அரைத்த தேங்காய் விழுதை 3 டீஸ்பூன் சேர்த்து கிளறி, மீண்டும்
அடுப்பில் வைத்து, அதில் புதினா இலைகளை சேர்த்து, கஞ்சிக்கு தேவையான
அளவு சுடுநீரை ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான நோன்பு
கஞ்சி தயார்.