ARTICLE AD BOX
மார்ச் 11 முதல் விற்பனை.. பட்ஜெட் வாசிகளை குஷிப்படுத்தும் விலையில் Nothing Phone 3a, Phone 3a Pro அறிமுகம்!
எம்டபுள்யூசி 2025 (MWC 2025) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2025 (Mobile World Congress 2025) நிகழ்வில், நத்திங் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக, நத்திங் போன் 3ஏ சீரிஸ் (Nothing Phone 3a Series) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
எதிர்பார்க்கப்பட்டபடியே இந்த சீரீஸின் கீழ் நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) என 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கின்றன? எப்போது முதல் வாங்க கிடைக்கும்? இதோ விவரங்கள்:

நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- பேக் பேனலில் கிளிஃப் லைட்டிங் செட்டப்
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக நத்திங் ஓஎஸ் 3.1
- ஹாரிசாண்டல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- புதிய 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி
நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்:
8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.22,999 (வங்கி சலுகைகள் உட்பட)
8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.24,999 (வங்கி சலுகைகள் உட்பட)
இந்த ஸ்மார்ட்போன் ஒயிட், பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் வருகிற மார்ச் 11 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்.
நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- பேக் பேனலில் கிளிஃப் லைட்டிங் செட்டப்
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக நத்திங் ஓஎஸ் 3.1
- சர்க்குலர் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார்
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி
நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்:
8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.27,999 (வங்கி சலுகைகள் உட்பட)
8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.29,999 (வங்கி சலுகைகள் உட்பட)
12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.31,999 (வங்கி சலுகைகள் உட்பட)
இந்த ஸ்மார்ட்போன் க்ரே மற்றும் பிளாக் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வருகிற மார்ச் 15 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்.