மளமளவென குறைந்த Redmi 5ஜி போன் விலை.. சோனி கேமரா.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

6 hours ago
ARTICLE AD BOX

மளமளவென குறைந்த Redmi 5ஜி போன் விலை.. சோனி கேமரா.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

Mobile
oi-Prakash S
| Published: Tuesday, March 4, 2025, 13:03 [IST]

சியோமி (Xiaomi) நிறுவனம் ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. அதாவது ஹோலி பண்டிகையை முன்னிட்டு (Xiaomi Holi offer) இந்த போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இப்போது ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய விலை மற்றும் இந்த போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.18,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அமேசான் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.16,999 இருந்தால் போதும் இந்த ரெட்மி போனை வாங்கிவிட முடியும்.

மளமளவென குறைந்த Redmi 5ஜி போன் விலை.. சோனி கேமரா.. எந்த மாடல்?

ரெட்மி நோட் 14 5ஜி அம்சங்கள் (Redmi Note 14 5G specifications): 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 × 2400 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா (Octa Core 6nm MediaTek Dimensity 7025 Ultra) சிப்செட் உடன் இந்த ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த
போனுக்கு 2 ஓஎஸ் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்.

அதேபோல் ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ மேஜிக் ஸ்கை (AI Magic Sky) மற்றும் ஏஐ ஆல்பம் (AI Album) போன்ற பீச்சர்களை கொடுக்கும் சியோமி ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi Hyper OS) சப்போர்ட் இந்த போனில் உள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா-வைடு + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி (சோனி எல்ஒய்டி 600 சென்சார்) கேமரா இதில் உள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5110mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Redmi Note 14 5G price cut ahead of Holi festival: check details here
Read Entire Article