ARTICLE AD BOX
Published : 02 Feb 2025 06:41 AM
Last Updated : 02 Feb 2025 06:41 AM
மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
<?php // } ?>மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
>கடன் தவிர மொத்த வரவுகள் மற்றும் மொத்த செலவினங்கள் முறையே ரூ .34.96 லட்சம் கோடி மற்றும் ரூ .50.65 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
>நிகர வரி வருவாய் ரூ.28.37 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
>நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
>மொத்த சந்தை கடன் ரூ 14.82 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
>2025-26 நிதியாண்டில் மூலதன செலவினம் ரூ.11.21 லட்சம் கோடி (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1%).
>புதிய வரித் தொகுப்பில் சராசரி மாத வருவாய் ரூ.1 லட்சம் வரை வருமான வரி இல்லை; இதனால் நடுத்தர வகுப்பினரின் வீட்டு சேமிப்பு மற்றும் நுகர்வை அதிகரிக்கும்
>புதிய வரித் தொகுப்பில், நிரந்தர வரி கழிவு ரூ.75,000 இருப்பதால், ஆண்டுக்கு ரூ.12.75 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
>குறைந்த அளவு வேளாண் உற்பத்தித் திறன் உள்ள 100 மாவட்டங்களை உள்ளடக்கிய ‘பிரதமரின் தன்-தானிய வேளாண் திட்டத்தில்’ 1.7 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.
>துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மைசூர் பருப்பு மற்றும் இதர பருப்பு வகைகளில் தற்சார்புக்கான இயக்கம்” தொடங்கப்படும்.
>திருத்தியமைக்கப்பட்ட வட்டி மானிய திட்டத்தின்கீழ் கிசான் கடன் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
>குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உத்தரவாதத்துடனான கடன் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
>“இந்தியாவில் தயாரியுங்கள் (மேக் இன் இந்தியா”) திட்டத்தை மேலும் விரிவாக்க சிறு, நடுத்தர, பெருந்தொழில்களையும் உள்ளடக்கிய தேசிய உற்பத்தி இயக்கம் தொடங்கப்படும்.
>அடுத்த ஐந்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் 50,000 அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்கள் அமைக்கப்படும்.
>மொத்தம் ரூ.500 கோடி முதலீட்டுடன் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம்.
>வங்கிகள் மூலம் பிரதமரின் ஸ்வாநிதி விரிவாக்கம் செய்யப்படும். ரூ.30,000 வரம்புடன் யுபிஐ-யுடன் இணைக்கப்பட்ட கடன் அட்டைகள் வழங்கப்படும்.
>வளர்ச்சி மையங்களாக நகரங்கள் என்ற திட்டத்திற்கு ரூ.1 லட்சம் கோடியில் நகர்ப்புற சவால் நிதியம் உருவாக்கப்படும்.
>ரூ.20,000 கோடி முதலீட்டுடன் சிறிய வகை ஈனுலைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அணுசக்தி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது..
>120 புதிய இடங்களுக்கான விமான போக்குவரத்து இணைப்பை விரிவுப்படுத்த திருத்தியமைக்கப்பட்ட உடான் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
>மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டுமானத்தை வேகப்படுத்த ரூ.15,000 கோடியில் ஸ்வாமிக் (குறைந்த செலவில் நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீட்டு வசதி திட்டம் ) நிதியம் அமைக்கப்படவுள்ளது.
>தனியார் துறை மூலமான ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளுக்கு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
>1 கோடிக்கும் அதிகமான மூலப்பிரதிகளை(கையெழுத்துப்பிரதிகள்) உள்ளடக்கி மூலப்பிரதிகளை கணக்கிடவும், பாதுகாக்கவும் ஞான பாரத இயக்கம் தொடங்கப்படும்.
>காப்பீட்டுக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரம்பு 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிப்பு.
>பல்வேறு சட்டங்களில் உள்ள 100-க்கும் அதிகமான பிரிவுகளை குற்றமற்றதாக மாற்றுவதற்கு மக்கள் விஸ்வாச மசோதா 2.0 அறிமுகம் செய்யப்படும்.
>புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான காலவரம்பு 2 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக அதிகரிப்பு.
>வருவாயில் வரி பிடித்தம் செய்து செலுத்துவதில் கால தாமதம் குற்றமற்றதாக மாற்றப்பட்டுள்ளது.
>வாடகை வருவாயில் வரிப்பிடித்தம் ரூ.2.4 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக அதிகரிப்பு.
>புற்றுநோய், அரிய மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான 36 உயிர்காக்கும் மருந்துகள், மருந்துப் பொருட்களுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
>ஐஎஃப்பிடி-க்கான (தட்டையான காட்சித் திரை) அடிப்படை சுங்கத் தீர்வை 20 சதவீதமாக அதிகரிப்பு, ஓபன் செல்களுக்கான(டிவியின் உட்கூறு) அடிப்படை சுங்கத்தீர்வை 5 சதவீதமாக குறைப்பு.
>உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க ஓபன் செல் பகுதிகள் மீதான அடிப்படை சுங்கத்தீர்வை விலக்கு.
>மின்கல உற்பத்தி, மின்சார வாகனங்களுக்கு கூடுதலான மூலதனப் பொருட்கள், செல்பேசிகளுக்கான பேட்டரி தயாரிப்பு ஆகியவற்றை அதிகரிக்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
>கப்பல் கட்டுமானத்திற்கான மூலதனப் பொருட்கள் மற்றும் சாதனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து விலக்கு.
>பதப்படுத்தப்பட்ட மீன் மீதான அடிப்படை சுங்கத் தீர்வை 15 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை