மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் பொறியாளர்கள் பற்றாக்குறை - பாதிப்புகள் என்னென்ன?

8 hours ago
ARTICLE AD BOX

Published : 26 Feb 2025 07:01 PM
Last Updated : 26 Feb 2025 07:01 PM

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் பொறியாளர்கள் பற்றாக்குறை - பாதிப்புகள் என்னென்ன?

மதுரை மாநகராட்சி | கோப்புப் படம்
<?php // } ?>

மதுரை: மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கும் வெறும் 42 உதவி பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்களே பணிபுரிவதால், அன்றாட குடிநீர், கழிவுநீர் பராமரிப்பு பணிகள் ஸ்தம்பித்து வருவதோடு, பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளும், புதிய சாலைப் பணிகளும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் ஒரே நேரத்தில் புதிய பாதாளசாக்கடை திட்டப் பணிகள், பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இப்பணிகளோடு, பொதுமக்களுக்கு தாமதம் இல்லாமல் முழுமையாக குடிநீர் விநியோகம் செய்வது, கழிவு நீர் அடைப்பை சரி செய்வது, சாலைகள் பராமரிப்பு போன்ற அன்றாட அத்தியாவசியப் பணிகளையும் பொறியியல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால், 100 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், கட்டிடங்கள், தெருக்களுக்கு தகுந்தவாறு, பொறியியல் பிரிவில் போதுமான அதிகாரிகள் இல்லை என்றும், அதனால், மக்களுக்கான அன்றாட அத்தியவசிய பணிகளும், புதிய வளர்ச்சித்திட்டப்பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து அதிமுகவின் மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா கூறும்போது, “மாநகராட்சியில் சுமார் 18 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கான அன்றாட குடிநீர் விநியோகம், கழிவுநீர் பராமரிப்பு மிக முக்கியமானது. தற்போது இந்த இரு பணிகளிலும் பல்வேறு குறைபாடுகள் நீடிக்கிறது. ஆனால், மக்களை சமாதானம் செய்து, கவுன்சிலர்களே தங்கள் சொந்தப்பணத்தை செலவு செய்தும், அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்துமே மக்களுக்கான பணிகளை நிறைவேற்ற வேண்டிய உள்ளது. வார்டுகளில் இயல்பாக மக்களுக்கான அன்றாடப்பணிகள் நடப்பதில்லை. ஒவ்வொரு வார்டிலும் பொறியில் துறையிலும், பிற துறைகளிலும் அதிகாரிகள், பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.

ஒரு வார்டில் குறைந்தப்பட்சம் ஒரு உதவிப் பொறியாளர் அல்லது இளநிலைப் பொறியாளர் தலைமையில் கழிவு நீர் பணிகளை பராமரிக்க 3 பணியாளர்கள், குடிநீர் பராமரிப்பு, வால்வு ஆப்ரேட்டர், சாலை பராமரிப்புக்கு 3 பேர் பணியாளர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், இரண்டு வார்டுகள் அல்லது மூன்று வார்டுகளுக்கு ஒரு உதவிப் பொறியாளர் அல்லது இளநிலைப் பொறியாளரே பணிபுரிகிறார்கள். வார்டில் அவர்களுக்கு கீழ் 6 பேருக்கு பதில் 3 அல்லது 2 பணியாளர்களே பணிபுரிகிறார்கள்.

கழிவு நீர் பிரச்சினை வந்தால் உடனே சென்று பார்க்க ஆளில்லை. பம்பிங் ஸ்டேஷன்களில் மோட்டார்களை பராமரித்து முறையாக இயக்க முடியவில்லை. ஒரே நேரத்தில் 4, 5 தெருக்களில் கழிவு நீர் பிரச்சனை ஏற்பட்டால் மக்கள் வீதிக்கு வந்து போராடத்தொடங்கி விடுகிறார்கள். அவர்கள் போராடினால் கவுன்சிலர்களுக்கு அவமானம் என்று கருதி, நாங்கள் அவர்களை சமாளித்து போராட்டத்தை கலைத்து அனுப்புகிறோம்.

உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் பற்றாக்குறையால் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், புதிய சாலைப்பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆணையாளர் சிறப்பு கவனம் எடுத்து, மாநகராட்சிக்கு தேவையான பொறியில் பிரிவு அதிகாரிகள், வார்டு ஊழியர்களை போதுமானஅளவு நியமிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

இது குறித்து பொறியியல் பிரிவு உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘100 வார்டுகளில் தற்போது உதவி பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் 42 பேர் மட்டுமே பணிபுரிகிறார்கள். இவர்கள் போதுமானது இல்லை. குறைந்தப்பட்சம் ஒரு பொறியாளர் 2 வார்டுகளையாவது பார்த்தால் மக்கள் பிரச்சனைகளை சமாளித்து அவர்களுக்கு உடனுக்கு தீர்வு கொடுக்கலாம். ஆனால், பொறியாளர்கள் பற்றாக்குறையால் ஒரு அதிகாரி 3 வார்டுகளை சேர்த்துப் பார்க்கும்நிலை உள்ளது.

ஒரே நேரத்தில் மாநகராட்சியில் குடிநீர் திட்டத்திற்கும், புதிய சாலைப்பணிகளுக்கும், பாதாளசாக்கடைப்பணிகளுக்கும் அரசு நிதி ஒதுக்கிவிட்டது. கவுன்சிலர்கள் முதல் பொதுமக்கள், ஒரே நேரத்தில் இப்பணிகளை முடிக்க எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கு தகுந்தார்போல், மாநகராட்சியில் போதுமான அதிகாரிகள், பணியாளர்கள் இல்லை. குடிநீர் திட்டப்பணி, பாதாளசாக்கடைப்பணிகளை முடித்து அவற்றை சோதனை ஓட்டம் பார்த்தப்பிறகே புதிய சாலைகளை போட வேண்டும்.

ஆனால், கவுன்சிலர்கள், பொதுமக்கள் அவசரப்படுவதால், சோதனை ஓட்டம் பார்ப்பதற்கு முன்பே பெரும்பாலான வார்டுகளில் புதிய சாலைகளை போட்டுவிட்டோம். தற்போது பெரியாறு கூட்டுக்குடிநீர் சோதனை ஓட்டம்பார்க்கும்போது, நீர் கசிவையும், குழாய் உடைப்பையும் சரி செய்ய சாலைகளை தோண்ட வேண்டிய உள்ளது. அதற்கும் அதிகாரிகளைதான், கவுன்சிலர்கள், பொதுமக்கள் குறை சொல்கிறார்கள். மக்களும், கவுன்சிலர்கள் பொறுமையாக இருந்திருந்தால் தற்போது சாலைகளை தோண்ட வேண்டிய நிலை வந்திருக்ககாது.

பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாளசாக்கடைப்பணி, புதிய சாலைப் பணிக்கென்று அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்படவில்லை. ஏற்கெனவே, 100 வார்டுகளில் காலம், காலமாக பற்றாக்குறையுடன் பணியாற்றி வந்த உதவிப்பொறியாளர், இளநிலைப்பொறியாளர்கள் தற்போது இந்த புதிய திட்டங்களுக்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். அதனால், பொறியியல் பிரிவு அதிகாரிகள், கடந்த 2 ஆண்டுகளாக மிகுந்த மனஉளச்சலுடன், தங்கள் குடும்பங்களை கூட கவனிக்க முடியாமல், மாநகராட்சி பணிகளை பொறுப்புடன் பார்த்தும் கெட்டப்பெயர் வாங்க வேண்டிய சூழல் உள்ளது’’ என்றனர்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article