பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.12,499 போதும்.. OLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

7 hours ago
ARTICLE AD BOX

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.12,499 போதும்.. OLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

Mobile
oi-Harihara Sudhan
| Published: Tuesday, March 4, 2025, 10:10 [IST]

பிளிப்கார்ட் விற்பனையில் நேரடியாக விலை குறைப்பில் கிடைக்கும் எச்எம்டி கிரெஸ்ட் 5ஜி (HMD Crest 5G) போனின் விற்பனை பின்னி எடுக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஓஎல்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், ஏஐ பீச்சர்களை கொடுக்கும் டூயல் கேமரா சிஸ்டம், 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களில் மிரள விடுகிறது. இந்த எச்எம்டி கிரெஸ்ட் 5ஜி போனின் மார்கெட் விலை எவ்வளவு? இப்போது என்ன விலைக்கு கிடைக்கிறது? அதன் முழு பீச்சர்கள் எப்படி?

எச்எம்டி கிரெஸ்ட் 5ஜி அம்சங்கள் (HMD Crest 5G Specifications): இந்த எச்எம்டி போனில் 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 90Hz ரெசொலூஷன் மற்றும் எச்ஐடி (HID) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு கூடுதல் டிஸ்பிளே பீச்சர்களை கொடுக்கிறது.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.12,499 போதும்.. OLED டிஸ்பிளே.. மாடல்?

50 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஷூட்டரில் செல்பீ கெஸ்ச்சர் (Selfie Gestures), செல்பீ ஸ்லோவ் மோஷன் (Selfie Slow Motion) மற்றும் நைட் செல்பீ (Night Selfie) பீச்சர்கள் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் டிரைபாட் மோட் (Tripod Mode), ஸ்பிளாஷ்ஷாட் (FlashShot), ஏஐ எச்டிஆர் (AI HDR) கிடைக்கிறது.

மேலும், டோன் கன்ட்ரோல் (Tone Control), சூப்பர் ஏஐ போர்ட்ராய்டு (AI Super Portrait) மற்றும் சூப்பர் நைட் (Super Night) பீச்சர் கிடைக்கிறது. இந்த எச்எம்டி போனில் 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 256 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி (MicroSD) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்கிறது. மாலி கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

யுனிசோக் டி760 6என்எம் ஆக்டா கோர் (Unisoc T760, 6nm Octa Core) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. ஹைபிரிட் டூயல் சிம் சிலாட் (Hybrid Dual SIM Slot), மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side-mounted Fingerprint) உள்ளது.

இதுபோக பயோமெட்ரிக் பேஸ் அன்லாக் (Biometric Face Unlock) கிடைக்கிறது. ஓஇசட்ஓ ஆடியோ (OZO Audio) சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர் கிடைக்கிறது. 2 மைக்ரோபோன்களை பேக் செய்துள்ளது. இந்த எச்எம்டி கிரெஸ்ட் 5ஜி போனில் IP52 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. டைப்-சி போர்ட் (Type-C Port) மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது.

800 ஃபுல் சார்ஜிங் சைக்கிள் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த எச்எம்டி கிரெஸ்ட் 5ஜி போனில் மிட்நைட் ப்ளூ (Midnight Blue), ராயல் பிங்க் (Royal Pink) மற்றும் லஸ் லைலாக் (Lush Lilac) சப்போர்ட் கிடைக்கிறது. இந்திய மார்கெட்டில் வெளியானபோது, இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 14,499ஆக இருந்தது.

ஆனால், இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) வெறும் ரூ.12,499 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலையில் பெறுவதற்கு டெபிட் கார்டுகள் அல்லது கிரெடிட் கார்டுகள் தேவையில்லை. இதே விலையில் நேரடியாக ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, ரூ.2000 டிஸ்கவுண்ட்டில் இந்த ஓஎல்இடி டிஸ்பிளே மாடலை வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
34 Percent Discount on HMD Crest 5G With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Read Entire Article