ARTICLE AD BOX
பிப்.21 முதல் ஆர்டர் அள்ளுமே.. iPhone 16e அறிமுகமானது.. சும்மா மாஸ்- ஆ கிளாஸ்-ஆ இருக்கு.. என்ன விலை?
ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஐபோன் மாடலான ஐபோன் 16இ (iPhone 16e) மாடலை இன்று (பிப்.19) இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆப்பிள் இதன் மாடல் பெயரை ஐபோன் 16இ ஆக மாற்றியுள்ளது. இதன்மூலம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ சீரிஸை அதிகாரப்பூர்வமாக கைவிட்டுள்ளது.
அதாவது புதிய ஐபோன் எஸ்இ 4 மாடலை வெளியிடுவதற்கு பதிலாக, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16 சீரிஸின் கீழ் ஒரு புதிய மாடலை சேர்த்துள்ளது. ஐபோன் 16இ மாடலின் இந்திய விலை நிர்ணயம் என்ன? எப்போது முதல் ப்ரீ-ஆர்டர் தொடங்கும்? எப்போது முதல் டெலிவரி தொடங்கும்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

ஐபோன் 16இ டிசைன் மற்றும் டிஸ்பிளே: இது ஃபேஸ் ஐடி உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஐபோன் எஸ்இ சீரீஸில் காணப்படும் பாரம்பரிய ம்யூட் சுவிட்சுக்கு பதிலாக ஒரு ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது. கேமராவை ஸ்டார்ட் செய்வது அல்லது டிஎன்டி மோட்-ஐ ஆன் செய்வது போன்ற பல்வேறு செயல்பாடுகளை விரைவாக அணுக, இந்த ஆக்ஷன் பட்டன் உதவும். கூடுதலாக, ஆப்பிள் ஐபோன் 16இ ஆனது யூஎஸ்பி-சி போர்ட்டுடன் வருகிறது. இது விரைவான டேட்டா பரிமாற்றம் மற்றும் சார்ஜிங்கிற்காக லைட்னிங் போர்ட்டை மாற்றுகிறது.
ஐபோன் 16இ சிப்செட்: இது ஆப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது. அதாவது ஐபோன் 16இ மாடல் ஆனது அதன் முன்னோடிகளை விட அதிக செயல்திறனை வழங்கும். ஏ18 சிப்பில் 6-கோர் சிபியு உள்ளது, இது ஐபோன் 11 மாடலில் உள்ள ஏ13 பயோனிக் சிப்பை விட 80 சதவிகிதம் வேகமானது என்று ஆப்பிள் கூறுகிறது.
மேலும் ஐபோன் 16இ மாடலில் 4-கோர் ஜிபியு மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சின் ஆகியவை மெஷின் லேர்னிங் பணிகளை மிகவும் திறமையாக கையாளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, நியூரல் என்ஜின் ஏ13 -ஐ விட இது ஆறு மடங்கு வேகமாக ஏஐ மாடல்களை செயலாக்க முடியும்.
எல்லாவாற்றை விட முக்கியமாக ஐபோன் 16இ மாடல் ஆனது ஏஐ அம்சங்களின் தொகுப்பான ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-ஐ ஆதரிக்கிறது. ஜென்மோஜி, ரைட்டிங் டூல்ஸ் மற்றும் சாட்ஜிபிடி உடனான ஒருங்கிணைப்பு போன்ற டூல்கள் இதில் அடங்கும், இது பல்வேறு ஆப்களில் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும்
ஐபோன் 16இ கேமரா: இது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது, இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. இயல்பாக ஐபோன் 16இ ஆனது 24எம்பி புகைப்படங்களை தான் எடுக்கும், ஆனால் அதிக தெளிவுத்திறன் கொண்ட காட்சிகளுக்கு 48எம்பி மோட்-க்கு மாறலாம்.
இதன் கேமரா செட்டப்பில் போர்ட்ரெய்ட் மோட், நைட் மோட் மற்றும் எச்டிஆர் ஆகிய அம்சங்கள் உள்ளன முன்பக்கத்தில் ஐபோன் 16இ மாடலில் ஆட்டோஃபோகஸுடன் 12எம்பி ட்ரூ டெப்த் கேமரா உள்ளது. வீடியோ ரெக்கார்டிங்கை பொறுத்தவரை, ஐபோன் 16இ மாடல் ஆனது 4கே ரெக்கார்டிங்கை வினாடிக்கு 60 பிரேம்கள் வரை ஆதரிக்கிறது. இதிலுள்ள டால்பி விஷன் ஆனது மேம்பட்ட கலர்கள் மற்றும் காண்ட்ராஸ்ட் உடன் உயர்தர வீடியோவை ரெக்கார்ட் செய்ய அனுமதிக்கிறது.
ஐபோன் 16இ பேட்டரி லைஃப் மற்றும் கனெக்டிவிட்டி: இது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது என்று ஆப்பிள் கூறுகிறது. இந்த மாடல் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் சேட்டிலைட் வழியாக மெசேஜ்கள் மற்றும் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ்-களை அனுப்ப உதவும் செயற்கைக்கோள் இணைப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இதன்மூலம் குறைந்த செல்லுலார் கவரேஜ் உள்ள பகுதிகளில் கூட தகவல்தொடர்புக்கான விருப்பங்கள் கிடைக்கும். சுவாரஸ்யமாக இதில் க்ராஷ் டிடெக்ஷனும் உள்ளது - இது கடுமையான விபத்து ஏற்பட்டால் அவசர சேவைகளுக்கு தானாகவே எச்சரிக்கை செய்யும்.
ஐபோன் 16இ மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ஐபோன் 16இ மாடலின் விலை ரூ.59,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஐபோன் 16 மாடலின் ஆரம்ப விலை ரூ.79,900 முதல் தொடங்குகிறது. அதாவது இந்த இரண்டு ஐபோன்களுக்கும் இடையே ரூ.20,000 விலை இடைவெளி உள்ளது. ஐபோன் 16இ மாடலின் ப்ரீ-ஆர்டர் பிப்ரவரி 21 முதல் தொடங்கும் என்றும், பிப்ரவரி 28 முதல் டெலிவரி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.