ஆரம்பிக்கலாமா? ரூ. 13,999 விலைக்கு 40 இன்ச் Smart TV.. விற்பனை தேதி இதான்.. அள்ளிட்டு போங்க மக்களே..

3 hours ago
ARTICLE AD BOX

ஆரம்பிக்கலாமா? ரூ. 13,999 விலைக்கு 40 இன்ச் Smart TV.. விற்பனை தேதி இதான்.. அள்ளிட்டு போங்க மக்களே..

News
oi-Sharath Chandar
| Published: Monday, February 24, 2025, 12:02 [IST]

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் புதிதாக இன்பினிக்ஸ் 40Y1V QLED டிவி (Infinix 40Y1V QLED TV) மாடலை இப்போது அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகளை பின்னுக்கு தள்ளும் வகையில், இன்பினிக்ஸ் நிறுவனம் இந்த 40 இன்ச் ஸ்மார்ட் டிவி (40 Inch Smart TV) மாடலை அடிமட்ட ரேட்டில் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை எந்தவொரு ஸ்மார்ட் டிவி பிராண்டும் வழங்க முடியாத விலையில் இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட் டிவியை விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த டிவி (TV) எப்போது வாங்க கிடைக்குமென்று தகவல் இங்கே.

இன்பினிக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய இன்பினிக்ஸ் 40Y1V QLED டிவி (Infinix 40Y1V QLED TV) மாடல் 40 இன்ச் டிஸ்பிளே அளவு கொண்ட மலிவு விலை 40 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலாக வெளிவருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி சாதனம் முழு எச்டி பிளஸ் ரெசொலூஷன் (full HD+ resolution) உடன் 60Hz ரெஃப்ரஷ் ரேட் (60Hz refresh rate) கொண்ட டிஸ்பிளேவாக வெளிவருகிறது.

ஆரம்பிக்கலாமா? ரூ. 13,999 விலைக்கு 40 இன்ச் Smart TV.. விற்பனை தேதி..

ஆரம்பிக்கலாமா? ரூ. 13,999 விலைக்கு 40 இன்ச் Smart TV.. விற்பனை தேதி இதான் மக்களே:

இந்த ஸ்மார்ட் டிவி பெயர் அறியப்படாத குவாட் கோர் பிராசஸர் (unnamed quad-core processor) உடன் மாலி G31 ஜிபியு (Mali-G31 GPU) அம்சத்துடன் வருகிறது. இந்த புதிய Infinix 40Y1V QLED Smart TV சாதனம் 4GB ரேம் (RAM) உடன் வருகிறது என்று இன்பினிக்ஸ் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பல பிரபலமான OTT தளங்கள் மற்றும் ஆப்ஸ்களின் உள்ளடக்கத்துடன் வருகிறது.

இந்த புதிய Infinix 40Y1V QLED TV சாதனம் யூடியூப் (YouTube), ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) என்று பெயர் மற்றம் செய்யப்பட்டுள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), அமேசான் பிரைன் வீடியோ (Amazon Prime Video), ஜியோ சினிமா (Jio Cinema), சோனி லைவ் (SonyLiv), மற்றும் ஜீ5 (Zee5) போன்ற ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்களுடன் நேரடியாக விற்பனைக்கு வருகிறது.

இன்பினிக்ஸ் 40Y1V QLED டிவி விலை (Infinix 40Y1V QLED TV Price):

இந்த ஸ்மார்ட் டிவி டூயல் 16W ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் டால்பி ஆடியோ ஆதரவுடன் வருகிறது. இது ஸ்டாண்டர்ட் (Standard), ஸாக்கர் (Soccer), மூவி (Movie), மியூசிக் (Music), மற்றும் யூஸர் (User) ஆகிய ஆடியோ மோட்களுடன் பயனர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் இயங்குகிறது. இந்த டிவி உங்கள் ஸ்மார்ட்போன் (smartphone) மற்றும் லேப்டாப் (laptop) உள்ளடக்கங்களை ஸ்கிரீன் மிரரிங் (screen mirroring) செய்யும் ஆதரவையும் கொண்டுள்ளது.

இந்த புதிய Infinix 40Y1V QLED smart TV விலை மற்றும் விற்பனை தேதி பற்றிய விபரங்களை பார்க்கலாம். இந்த இன்பினிக்ஸ் 40Y1V QLED டிவி (Infinix 40Y1V QLED TV) சாதனம் இந்தியாவில் ரூ. 13,999 என்ற அடிமட்ட மலிவு விலையில் விற்பனைக்கு வரும் என்று இன்பினிக்ஸ் நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. இதுவொரு சிறப்பு ஆரம்ப கால விற்பனை விலை என்பது கவனிக்கத்தக்கது.

இதன் அசல் விலை பற்றிய விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த இன்பினிக்ஸ் 40Y1V QLED டிவி (Infinix 40Y1V QLED TV) சாதனம் வரும் மார்ச் 1, 2025 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனை வாங்க கிடைக்கிறது. இது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வழியாக விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.13,999 என்ற சலுகை விலைக்கு மேல் கூடுதல் வங்கி சலுகை கிடைக்கும் என்பதால், இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்கவும் வாய்ப்பிருக்கிறது.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Infinix 40Y1V QLED TV Launched In India Opening Sale Starts March 1 2025 For Offer Price Of Rs 13999
Read Entire Article