“நமது ரயில்வே 21-ம் நூற்றாண்டுக்கு உண்மையிலேயே தயாராக உள்ளதா?” - ராகுல் காந்தி கேள்வி

3 days ago
ARTICLE AD BOX

Published : 22 Feb 2025 06:16 PM
Last Updated : 22 Feb 2025 06:16 PM

“நமது ரயில்வே 21-ம் நூற்றாண்டுக்கு உண்மையிலேயே தயாராக உள்ளதா?” - ராகுல் காந்தி கேள்வி

<?php // } ?>

புதுடெல்லி: “நமது ரயில்வே 21-ம் நூற்றாண்டுக்கு உண்மையிலேயே தயாராக உள்ளதா?” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முக்கியத் தலைவருமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நேற்று ரேபரேலியில் உள்ள மாடர்ன் கோச் தொழிற்சாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடனான கலந்துரையாடலின் போது, ​​ஒரு முக்கியமான கேள்வி எழுந்தது. கோடிக்கணக்கான இந்தியர்களின் பயணத்தின் முதுகெலும்பாக இருக்கும் நமது ரயில்வே, 21-ம் நூற்றாண்டுக்கு உண்மையிலேயே தயாராக உள்ளதா என்பதே அந்தக் கேள்வி.

தற்போதைய தேவைகளைக் கருத்தில் கொண்டு, அதை மேலும் நவீனமாகவும், பாதுகாப்பாகவும், திறமையாகவும் மாற்ற விரைவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ரயில்வேயை வெறும் பயணத்துக்கான வழிமுறையாக மட்டுமில்லாமல் உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தின் வலுவான தூணாகவும் நாம் உருவாக்க வேண்டும். வெளிநாட்டு இயந்திரங்கள், உற்பத்தி மற்றும் புதுமைகளை நம்புவதற்குப் பதிலாக, முற்றிலும் உள்ளூர்மயமாக்கப்பட்ட உற்பத்தி முறையை வலுப்படுத்துவதே நமது இலக்காக இருக்க வேண்டும்.

நமது பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்களின் கடின உழைப்புக்கு சரியான திசை கொடுக்கப்பட்டு, காலத்தின் தேவைக்கேற்ப உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், ரயில்வே போக்குவரத்தில் மட்டுமல்ல, நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

कल रायबरेली में मॉडर्न कोच फैक्ट्री के अधिकारियों और कर्मचारियों के साथ बातचीत के दौरान एक महत्वपूर्ण सवाल उठा -

क्या करोड़ों भारतीयों की यात्रा की रीढ़ हमारी रेलवे वाकई 21वीं सदी के लिए तैयार है?

मौजूदा समय की ज़रूरतों को देखते हुए इसे और आधुनिक, सुरक्षित और सक्षम बनाने के… pic.twitter.com/sIEjqTajWF

— Rahul Gandhi (@RahulGandhi) February 22, 2025

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article