வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய மற்றும் கலாச்சார நகரமான திருச்சிராப்பள்ளி பல புகழ்பெற்ற கோவில்களையும், வரலாற்றுச் சின்னங்களையும் கொண்ட இடம் ஆகும். தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியல் முறைகளை எடுத்துக் காட்டும் நகரமாகவும் திருச்சி உள்ளது. இங்கே சென்று அவசியம் பார்க்க வேண்டிய ஏழு இடங்களை பற்றி பார்ப்போம்.

ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி கோயில்
இது ஆசியாவில் உள்ள விஷ்ணு கோவில்களிலேயே மிகப்பெரிய இந்து கோயிலாகும். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாக விளங்குகிறது. மேலும் இதன் அற்புதமான கட்டிடக்கலை மற்றும் சிற்பங்கள் அனைவரையும் கவரும் வண்ணமாக உள்ளது. பெருமாளின் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மை தலமாக விளங்கும் இக்கோவில், பக்தர்களால் பூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது. திருச்சி சுற்றுலாவிலும், தமிழக சுற்றுலாவிலும் முக்கிய இடம் பிடிப்பது திருச்சி ரங்கநாதர் ஆலயம். மார்கழியில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்
திருச்சியின் மையப் பகுதியில் உள்ள பாறைக்கோட்டை மலையின் மீது அமைந்துள்ள ஒரு பிரபலமான இடமாகும். இங்கு உச்சி பிள்ளையார் கோயில் மற்றும் தாயுமானவர் சுவாமி கோயில்கள் உள்ளன. இந்த மலைக்கோட்டையின் மேலிருந்து பார்த்தால் திருச்சி நகரத்தின் முழு அழகையும் கண்டு ரசிக்க முடியும். திருச்சி மக்களின் மிக முக்கியமாவ பொழுதுபோக்கு இடமாகவும் இது உள்ளது.
ஜம்புகேஸ்வரர் கோயில்
பஞ்சபூத தலங்களில் ஒன்றான ஜம்புகேஸ்வரர் கோயில் சிவபெருமானுக்குரிய புனித கோயிலாகும். இந்த பாரம்பரிய கோயில் நீரின் அம்சத்தை குறிக்கும் மற்றும் ஒரு கண் கவர் நிலத்தடி நீர் ஊற்றையும் கொண்டுள்ளது. இங்கு அம்மன் அகிலாண்டேஸ்வரி என்னும் பெயரில் அருள் பாலிக்கிறார். தமிழகத்தில் உள்ள முக்கியமான சிவ தலங்களில் ஒன்றாகவும், சக்தி தலங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது.
கல்லணை அணை
கரிகால சோழ மன்னரால் கட்டப்பட்ட இந்த அணை உலகின் மிகப் பழமையான அணைகளில் ஒன்றாகும். இந்த அணை பொறியியல் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். திருச்சி மாவட்டம் முழுவதற்கும் நீர்ப்பாசன ஆதாரமாகவும் செயல்படுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சென்று பொழுது போக்கும் விதமாக பூங்காக்கள், ஆற்றங்கரை கொண்ட அழகிய இடமாகவும் இருக்கிறது.

செயின்ட் லூர்து தேவாலயம்
19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு அழகான நியோ கோதிக் பாணி தேவாலயம் இத. இதன் பிரம்மிக்க வைக்கும் வண்ண கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் அமைதியான சூழ்நிலைக்கு பெயர் பெற்றதாகும். இந்த தேவாலயம் தமிழ்நாட்டில் அதிக சுற்றுலா பயணிகள் வந்து வழிபட்டு செல்லும் தேவாலயங்களில் ஒன்றாகும்.
புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி
கொல்லிமலை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி இயற்கை ஆர்வலர்கள் ஈர்க்கும் முக்கிய சுற்றுலா தலமாகும். அமைதியான சூழலுடன், இயற்கை அழகு நிறைந்த இந்த இடம் முக்கிய பொழுதுபோக்கும் இடமாகும்.
சமயபுரம் மாரியம்மன் கோவில்
திருச்சி காவிரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் ஒரு பிரபலமான கோயிலாகும். இங்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.மாசி மாதத்தில் அம்மனுக்கு நடைபெறும் பூச்சொறிதல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet