ARTICLE AD BOX
Published : 20 Feb 2025 06:20 AM
Last Updated : 20 Feb 2025 06:20 AM
தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் நியமனம்

சென்னை: தமிழ்நாடு லோக்ஆயுக்தா தலைவராக நீதித்துறை உறுப்பினராக இருந்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ராஜமாணிக்கத்தை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மை துறை செயலர் ஜி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டப்படி, லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை இந்த அமைப்பு விசாரிக்கும். ஒரு தலைவர், 2 நீதித்துறை உறுப்பினர்கள், நீதித்துறை சாரா 2 உறுப்பினர்கள் இந்த அமைப்பில் இருப்பார்கள். இதில், தலைவர் மற்றும் நீதித் துறை சாராத உறுப்பினர்கள் பணியிடம் காலியாக இருந்த நிலையில், தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, தற்போது நீதித்துறை சார்ந்த உறுப்பினராக உள்ள சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ராஜமாணிக்கம், லோக் ஆயுக்தா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். காலியாக உள்ள நீதித் துறை சாரா உறுப்பினர்கள் இடங்களுக்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட நுகர்வோர் விவகாரங்கள் குறைதீர்வு ஆணையத்தின் தலைவர் வி.ராமராஜ், வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜமாணிக்கம் 2027 ஏப்ரல் 17-ம் தேதி வரை பதவியில் இருப்பார். புதிய உறுப்பினர்கள் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது - இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்கள் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- தமிழ் தாத்தா உ.வே.சா.வின் செம்பணி தமிழ் உள்ளவரை போற்றப்படும்: 171-வது பிறந்தநாளையொட்டி ஸ்டாலின் புகழாரம்
- பிப்.26-ல் முடியும் மகா கும்பமேளா நீட்டிக்கப்படுமா? - பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகம் விளக்கம்
- காலணி தொழிலாளியின் குடும்பத்தாரை சந்தித்தார் ராகுல்
- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி டெண்டர்